பசியில் தவிக்கும் உலகம்!



Image result for india hunger index


அதிகரிக்கும் பசி!


Image result for india hunger index

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படும் மக்களின்  எண்ணிக்கை குறைவதாயில்லை. உலக மக்கள்தொகையில் 10.9% பேர்(821 மில்லியன்) ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, சீனா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைந்தாலும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐந்தில் ஒருவர் என்ற விகிதத்தில் ஊட்டச்சத்து போதாமை நிலவுகிறது.
1990-2016 காலகட்டத்தில் வெப்பமயமாதலின் விளைவாக பருவக்காலங்கள் மாறி மழை பொய்த்ததால் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்தன. 

இதன் விளைவாக ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கும் இடைவெளியும் அதிகரித்துள்ளது. தற்போது ஊட்டச்சத்து பிரச்னை காரணமாக உலகின் 50 % எடைகுறைவான 30% சமச்சீரற்ற வளர்ச்சி கொண்ட குழந்தைகள் வசிக்கும் நாடாக இந்தியா மாறியிருப்பது வேதனை.