& ஹிஸ்டரி தெரிஞ்சுக்கோங்க!
& உருவான கதை!
முதல் நூற்றாண்டில் சுவர் விளம்பரங்களில்
&(Ampersand) எழுத்து பயன்பட்டது. லத்தீன் வார்த்தையான et என்பதைக் குறிக்கும்
விதமான இணைப்பு எழுத்து இது. எட்செட்ரா என்று கூறுவதை &c என்று அக்காலகட்டத்தில்
குறிப்பிட்டு வந்தனர்.
டைரோனியன் சுருக்கெழுத்து முறையிலும்
& பயன்பட்டு மக்களிடையே புகழ்பெற்றது. பின்னாளில் இம்முறை கைவிடப்பட்டாலும்
& எழுத்து மொழியில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்
ஆங்கில எழுத்துக்களில் 27 வது எழுத்தாக & இடம்பெற்றது. இஸட் எழுத்துக்கு பிறகு
இருமுறை அண்ட் என்று கூறுவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் 1837 ஆம்
ஆண்டு ஆங்கில அகராதியிலும் நீங்காத இடம் பிடித்தது.