ராணுவப்பேரணி தாக்குதலுக்கு அமெரிக்கா காரணம்?




Image result for iran military parade attack





ராணுவப்பேரணியில் தாக்குதல்!

அண்மையில் இரானின் ராணுவப்பேரணியில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் சவுதிஅரேபியாவும் காரணம் என இரான் அதிபர் ஹசன் ருகானி குற்றஞ்சாட்டியுள்ளார். ராணுவப்பேரணி தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதோடு 70 பேர் படுகாயமுற்றனர். இதில் ராணுவ வீரர்களோடு மக்களும் உள்ளடக்கம்.

“அமெரிக்கர்கள் சில நாடுகளுடன இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கான விளைவுகளை அமெரிக்கர்கள் சந்திப்பார்கள்” என காட்டமாக பேசியுள்ளார் ருகானி. விரைவில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்கவுள்ள ருகானி இம்முறையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இக்குற்றச்சாட்டை உடனடியாக மறுத்துள்ளார். இராக்குடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த 30 ஆம் ஆண்டு தினத்தையொட்டி நடந்த ராணுவப்பேரணியில் மேற்கண்ட துரதிர்ஷ்ட துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. சிரியா, குவைத், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் இரான் தாக்குதலுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டன. ஆனால் சவுதி அரேபியா மூச்சு காட்டவில்லை. தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள், அரேபிய போராட்ட இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என இரான் இத்தாக்குதல் குறித்து விசாரித்து வருகிறது.  
 

பிரபலமான இடுகைகள்