பாலியல் குற்றங்களை கண்டறிகிறது இந்திய அரசு!




Image result for sex offender registry



பாலியல் குற்ற ஆவணகம்!

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வல்லுறவு, தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை குறைக்கும் விதமாக இந்திய அரசு, அண்மையில் பாலியல் குற்ற பதிவேட்டினை  தொடங்கியுள்ளது.
குற்றவாளிகளின் பெயர், புகைப்படம், முகவரி, ஆதார் கார்டு, கைரேகை, டிஎன்ஏ மாதிரிகள் ஆகியவை இந்த பதிவேட்டில் பராமரிக்கப்படும்.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளிலிருந்து இது வேறுபட்ட ஒன்றல்ல. தற்போது உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்துறையின் ஆவணங்களைப் பெற்று குற்றங்களை பதிவு செய்யும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் இப்பதிவேடு முறை செயல்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் குற்ற பதிவேடுகளில் உள்ள குற்றவாளி விவரங்களை அரசு துறையினர் மட்டுமே பார்க்கமுடியும். ஒருவரின் குற்றச்செயல்பாடுகளை இதன் மூலம் அறிந்து தீர்க்க முடியும். 2016 ஆம் ஆண்டில் மட்டும் பதிவான வல்லுறவு வழக்குகளின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 947. ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 954(2016).