தடுப்பூசி வேண்டாம் - எதிர்ப்புக்கு காரணம் என்ன?
தடுப்பூசிக்கு
எதிரான போர்!
இத்தாலி வாலிபால்
தேசிய அணியில் வீரர் இவான் ஸாய்ட்செவ், தன் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட
செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்ததுதான் பிரச்னையின் பிள்ளையார் சுழி.
கட்டாய தடுப்பூசிக்கு
எதிரான குழு இவானை கடுமையான வார்த்தைகளில் வறுத்தெடுக்க தொடங்கியது. இதற்கு
பின்னால் பாப்புலிச அரசியல் கட்சிகள் இருப்பதாக கருதுகிறது அரசு. இதற்கு சில நாட்கள் முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் கியூலியா கிரில்லோ,
தடுப்பூசி போட்ட குழந்தை என சான்றிதழை பள்ளியில் அளிக்கவேண்டியதில்லை
என அறிவித்திருந்தார். முந்தைய அரசின் அமைச்சரான பீட்ரைஸ் லோரென்ஸின்
உத்தரவில் சான்றிதழை பள்ளிக்கு தருவதை மட்டும் கிரில்லோ நீக்கியுள்ளார். சென்றாண்டு ஐரோப்பாவில் ரோமானியாவுக்கு பிறகு இத்தாலியில் 4,885 பேர் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாண்டில்
அந்த இறப்பு எண்ணிக்கை 1,700 ஆக குறைந்துள்ளது. கிரில்லோவின் கட்சியான M5S, தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களைக்
கொண்டது. இதன் கூட்டணிக்கட்சியான லீக் கட்சியின் தலைவரும் பிரதமருமான
மாட்டியோ சால்வினி பத்து தடுப்பூசிகள் என்பது மிக அதிகம் என கூறியுள்ளார்.