லித்தியம் அயான் பேட்டரிக்கு மாற்று!





நியூஜென் பேட்டரி!



லித்தியம் அயான் பேட்டரி ஆளும் நவீன உலகில் சிலிகானை மட்டும் எதிர்கால நம்பிக்கையாக அறிவியலாளர்கள் பார்க்கின்றனர்.

தற்போதைய பேட்டரிகளை விட பத்துமடங்கு சக்தி தேக்கும் திறன்தான் இதற்கு காரணம். தற்போது இதற்காக கண்டுபிடித்துள்ளதுதான் சிலிகான் எக்ஸ். கிராபீனுக்குள் சிலிகானை பவுடராக்கி நானோதுகளாக்கி பயன்படுத்துவது புதிய டெக்னிக். ஆற்றல் தொழில்நுட்பத்துறை மையத்தின் அறிவியலாளர்கள் மின்சாரத்தை தேக்கும் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது கிராபீன் ஆனோடாக பயன்பட்டு தேக்கும் மின்சாரத்தை விட 3-5 சதவிகிதம் அதிகம் சிலிகான் தேக்கும். சிலிகானை ஆனோடாக பயன்படுத்தும் முயற்சிகள் சோதனையளவில் உள்ளன. சிலிகான் ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டுக்கு வரும்போது வாரத்திற்கு இருமுறை சார்ஜ் செய்தாலே போதும். எலக்ட்ரிக் வாகனங்களை ஆயிரம் கி.மீ ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டி வரும். நார்வே ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ச்சியாக சிலிகான் தொடர்பான ஆராய்ச்சிகளை செய்துவருகிறார்கள்.