ஜப்பானில் வெள்ளம்!
ஜப்பான் பேரழிவு!
பிரதமர் அபே தன்
வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்துவிட்டு வெள்ளபாதிப்பு பகுதியான ஒகாயாமா, மபிக்கு வருகை தந்து சேதங்களை பார்வையிட்டார். மக்களை மீட்க நிலத்தில் புதைந்துபோன வீடுகளை மீட்புப்படையினர்
மோசமான வானிலையிலும் தோண்டி வருகின்றனர்.
"நாங்கள் வீட்டையும், விலைமதிப்பான
பொருட்களை இழந்தாலும் நினைவுகளை இழக்கவில்லை"
என்கிறார் வெள்ளப்பாதிப்பிற்குள்ளான பெண்மணி ஹிரோகோ ஃபியுகுடா. குராஷிகி
பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் கார்களை, வீடுகளை
மூழ்கடித்தது. பின்
மரங்களை வீழ்த்தி கார்களோடு இழுத்து சென்று போக்குவரத்தை முடக்கியது. அரசு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்து திரும்ப
பெற்றாலும் மக்களின் மனதில் இன்னும் பயம் நீங்கவில்லை.