ஆப்பிரிக்காவில் கருப்பின துணை அதிபர்!





ஆப்பிரிக்காவின் கருப்பின போராளி!

கோஸ்டாரிகா நாட்டின் துணை அதிபராக வரலாற்றில் முதல்முறையாக கருப்பின பெண் எப்ஸி கேம்பெல் பர் தேர்வாகியுள்ளார். லத்தீன் அமெரிக்க நாடான அங்கு ஆப்பிரிக்க பெண்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை செய்துள்ள எப்ஸியை , துணை அதிபராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பள்ளியில் தொடங்கி பல்வேறு இடங்களில் கருப்பின மக்கள் மீதான நிற, இன ஒதுக்கல் பிரச்னை கோஸ்டாரிகாவில் உண்டு. பல்வேறு கலாசாரங்கள் கொண்ட அந்நாட்டில் பாகுபாடற்ற மனிதர்களை உருவாக்கும் பணியும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தும் பணியை எப்ஸி செய்வார் என நம்பலாம். ஆப்பிரிக்கர்கள் வாழும் லிமோன் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் தாக்கம் அதிகம். பிரேசிலில் கருப்பினமக்களுக்கான செயல்பட்ட மரியல்லே ஃபிரான்கோவை எப்ஸி கேம்பெல்லுடன் ஒப்பிட்டு ஆப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவார் என அரசியல் வட்டாரங்கள் பேசிவருகின்றன.

பிரபலமான இடுகைகள்