போதையில் சரிந்துவிழும் பஞ்சாப்!







போதை ஒழிப்பில் பஞ்சாப்!

பஞ்சாப் அரசு பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் சிரிஞ்ச் விற்க விதித்திருந்த தடையை அண்மையில் விலக்கிக்கொண்டுள்ளது. அரசின் தடையால் ஒரே சிரிஞ்சுகளை பயன்படுத்தும் நிலையால் ஹெபடைடிஸ் பி முதல் எய்ட்ஸ் வரை ஆட்படுவார்கள் என மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்ததால் அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

இவ்வாண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் போதைப் பொருட்களால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். போதைப்பழக்கத்தை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அமரிந்தர் தலைமையிலான அரசுக்கு பெரும் நிர்பந்தம் அளித்துள்ளது. பஞ்சாபில் மட்டும் போதைப்பொருட்களை 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன்படுத்திவருவதாகவும் இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இப்பொருட்களை தீவிரமாக சார்ந்திருப்பதாகவும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஆய்வு முடிவுகள்(2015) தெரிவிக்கின்றன.


இதில் ஹெராயின்(53%), ஓபியம்(33%), மருத்துவதுறை ஒபியாய்டுகள்(14%) என பஞ்சாபில் பயன்பாடு உள்ளது. இதில் ஆண்களின் அளவு 99%(18-35 வயது-76%) படித்தவர்களின் விகிதம் 89% உள்ளது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பஞ்சாபின் தனிநபர் வருமானமான ரூ. 392 யைவிட ஹெராயினுக்கு ஒருவர் செலவிடும் தொகை(ரூ.1,400) அதிகம். 67% பஞ்சாப் குடும்பங்கள் இப்பிரச்னையில் மாட்டித்தவிக்கின்றன.மேலும் வேலையின்மை அளவும் தேசிய சராசரியைவிட பஞ்சாபில் அதிகம்