சிஎன்என் ஜிம் அகோஸ்டா - ட்ரம்மை வைத்த செய்தியாளர்!
ட்ரம்பை வதைத்த செய்தியாளர்!
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பில் சிஎன்என் நிருபர் ஜிம் அகோஸ்டா கேட்ட கேள்வியால் டரியலான அதிபர் ட்ரம்ப்,
ஜிம் வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிஎன்என்
தொடர்ந்த வழக்கில், வெள்ளை மாளிகையில் நிருபர்கள் நுழைவதற்கான அரசியல் சட்ட அனுமதி
கிடையாது என கூறியுள்ளது ட்ரம்ப் அரசு.
நவ.7 அன்று நடந்த பத்திரிகையாளர்
சந்திப்பில் அகதிகள் பிரச்னை பற்றி திரும்ப திரும்ப ஜிம் கேட்ட கேள்விகள் ட்ரம்பை சங்கடப்படுத்த,
மேடையிலேயே அவரை வசைபாடினார் ட்ரம்ப். பின்னர் வெளியான வீடியோவில் ஜிம் மீது வெள்ளை
மாளிகை பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது போலி என பின்னர் நிரூபணமானது.
சிஎன்என் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்குக்கு ஃபாக்ஸ் நியூஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
1962 ஆம் ஆண்டு கியூபாவிலிருந்து
அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த வந்த ஜிம் அகோஸ்டா, ரேடியோவில் பத்திரிகைப்பணியைத் தொடங்கி
பின்னர் டிவி சேனல்களுக்கு மாறியவர். 2007 ஆம் ஆண்டிலிருந்து சிஎன்என் சேனலில் பயணியாற்றிவருகிறார்.
ஒபாமாவின் கியூப பயணத்தை தொகுத்து வழங்கிய செய்தியாளர் இவர்.