கடல் சிப்பிகளை அழிக்கும் மர்ம ஒட்டுண்ணி!
















கடல் வளங்களை அழிக்கும் ஒட்டுண்ணி!


பிரான்ஸ், இத்தாலி, மால்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலுள்ள கடல்வளங்களை ஒட்டுண்ணி கபளீகரம் செய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக சிப்பிகளை. சிப்பிகளை காக்கும் விதமாக ஐரோப்பிய யூனியன் சட்டம் போட்டும் இதனை உணவுக்காகவும், அலங்காரப்பொருட்களை செய்வதற்காகவும் வேட்டையாடி வந்தனர். இது ஒருபுறம் சிப்பிகளின் எண்ணிக்கை குறைத்தது என்றால் தற்போது ஒட்டுண்ணிகளின் போர் தொடங்கிவிட்டது.

முதுகெலும்பற்ற உயிரியான பென் ஷெல், நீரினை குறிப்பிட்ட முறையில் சுத்திகரிப்பதோடு இதன் உடலிலிருந்து பெறும் இழைகளை கடல் பட்டு என்று அழைக்கின்றனர்.

ஓட்டுண்ணிகள் மட்டுமே சிப்பிகளின் அழிவுக்கு காரணம் என்று சொல்வது, தீவிரவாதத்திற்கு இந்திய முஸ்லீம்கள்தான் காரணம் என்று சொல்வதைப்போல பெரும் பொய்யாகவே தெரியும். ஐரோப்பிய யூனியனின் தடை சட்டத்தை அவர்களும் கறாராக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் விளைவாக மாசுபடுதலால் எண்ணிக்கை பெருமளவு சரிந்த சிப்பிகள் ஓட்டுண்ணிகளின் நுட்பமான தாக்குதலால் அழிவை நோக்கி நடைபோட்டு வருகின்றன.

2016 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலில் ஒட்டுண்ணியை முதன்முதலில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனாலும் அது தாக்கும் விதம் பற்றி ஏதும் தெரியவில்லை.  சிப்பியின் செரிமான இயக்கத்தை முதலில் தாக்கும் ஒட்டுண்ணிகள் சிப்பியை முழுமையாக மூட முடியாமல் செய்கின்றன. தாக்குதலின் முதல் நிலை இதுவே.

"தாக்குதலின் விளைவாக ஸ்பானிய கடல்பகுதியில் பென்ஷெல்கள் காணாமல் போய்விட்டன" என்கிறார் இன்டர்நேஷனல் நேச்சர் கன்சர்வேஷன் யூனியன் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் மரியா டெல் மர் ஒட்டேரோ.  கடல்வளங்களை ஒட்டுண்ணி அழிப்பதை பல்வேறு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து கண்டுபிடித்த ஆய்வாளர்கள், ஒட்டுண்ணியின் உடல் அமைப்பை கண்டுபிடிப்பது முதல் அதனை தடுப்பது வரை பெரியளவு நடவடிக்கையில் இறங்கவில்லை என்பது வேதனையான உண்மை.

தொற்றுநோய் போல வேகமாக துருக்கி, கிரீஸ் என பல்வேறு நாடுகளிலும் ஒட்டுண்ணி பரவிவருகிறது. ஓட்டுண்ணிக்கு தாவரங்களின் உடல்கள் குறிப்பிட்ட காலம் மட்டும் தேவை என்று அழித்துவிட்டு அடுத்தடுத்த உயிருக்கு தாவி நகர்வது கடல் ஆராய்ச்சியாளர்களை மிரட்டியுள்ளது. ஏனெனில் அதன் வலிமை நாளுக்குநாள் அதிகரித்து வருவதுதான்.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: அசோசியேட் பிரஸ், வாஷிங்டன் போஸ்ட்(எலினா பெக்டாரோஸ்)

பிரபலமான இடுகைகள்