பான்பராக் கறைகளை அழிக்க ஜெல்!





Related image




பான்பராக் பெண்கள்!

வட இந்தியர்களின் பான்பராக் ஆசை, அங்குள்ள கட்டிடங்களில் ஏறினாலே அனைவரும் பார்க்கலாம். அழகான ஃபிளாட்டுகளின் மூலையில், ரயிலில் என வெளித்தெரிந்த பான்பராக் கறைகள் இந்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்திற்கு சவால் கொடுத்தன. தற்போது மகாராஷ்டிரா கல்லூரி மாணவிகள் அதனை நீக்கும் ஜெல்லை தயாரித்து விருது பெற்றுள்ளனர்.

மகாராஷ்டிராவிலுள்ள மாதுங்கா நகரின் ருயா கல்லூரியைச் சேர்ந்த மைக்ரோபயாலஜி துறைசார்ந்த எட்டு மாணவிகள், பான்கறைகளை நீக்கும் விலைகுறைந்த ஜெல்லை உருவாக்கி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் பாராட்டு பெற்றுள்ளனர்.
ரயில்நிலையங்களில் மாதம்தோறும் பத்து லிட்டர் ஆசிட்டும், 60 ஆயிரம் லிட்டர் நீரும் பான் கறைகளை கழுவ செலவாகி வருகிறது. பான்கறைகளின் சிவப்பு நிறத்தை அகற்றி, கிருமிகளை அழிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவிகள் அமெரிக்காவின் போஸ்டனில் நடந்த iGEM 2018 போட்டியில் பான்கறை நீக்க ஐடியாவை சொல்லி 300 குழுக்களை ஒதுக்கி தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். தேவேந்திர பட்னாவிஸ் மாணவிகள் போட்டியில் பங்கேற்ற பத்து லட்சரூபாய் வழங்கியது. தற்போது வணிகரீதியாக பான்கறை ஒழிக்கும் ஜெல்லை தயாரிக்க மாணவிகள் குழு முயற்சித்து வருகிறது.

பிரபலமான இடுகைகள்