சுதேசி புரோசஸர் - சக்தி!
இந்தியாவின் சுதேசி சக்தி புரோசஸர்!
இந்தியாவின் முதல் சுதேசி மைக்ரோபுரோசஸர்
விரைவில் ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமரா ஆகியவற்றில் இடம்பெறவிருக்கிறது. சக்தி என பெயரிடப்பட்ட
இதனை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்து மேம்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு மைக்ரோசிப்புகளில்
சைபர் தாக்குதல்கள் அதிகளவு நிகழ்வதால் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு வட்டாரங்களின்
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை களைய புதிய மைக்ரோபுரோசஸர் சக்தி உதவக்கூடும்.
“ப்ளூஸ்பெக் என்ற கட்டற்ற சின்தெசிஸ்
மொழியில் சக்தி புரோசஸரை உருவாக்கியுள்ளோம். சக்தியை சிசிடிவி, ஸ்மார்ட்போன் என பல்வேறு
பொருட்களில் அதற்கேற்ப மாற்றி பயன்படுத்திகொள்ளலாம்” என்கிறார் பேராசிரியர் காமகோடி
விழிநாதன்.
கடந்த ஜூலையில் ஐஐடி மெட்ராஸ்
ஆராய்ச்சியாளர்களின் கைவண்ணத்தில் சிப்களை தயாரித்து இறுதிக்கட்ட பணிகளை அமெரிக்காவிலுள்ள
ஒரேகானின் இன்டெல் நிறுவனத்தில் செய்தனர். தற்போது பதிமூன்று நிறுவனங்களுடன் சக்தி
புரோசஸரை விற்பதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கென பராசக்தி
என தனி மைக்ரோபுரோசஸரை விரைவில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட உள்ளனர்.