எரிடிரியாவின் வளர்ச்சி ஒப்பந்தம்!



Image result for eritrea



அமைதி வளம் வளர்ச்சி!


கடந்த ஜூலையில் எத்தியோப்பியா அதிபர் அபய் அஹ்மதுடன் எரிடிரியா அதிபர் இசையாஸ் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதன்விளைவாக அப்பகுதியில் அமைதி திரும்ப வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக சோமாலியா நாட்டுடன் பதினைந்து ஆண்டுகளாக நின்றுபோயிருந்த அரசு உறவுகளை எரிடிரியா புதுப்பிக்க உள்ளது. உள்நாட்டுப்போர் காரணமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்திருந்த தடைகளும் விரைவில் விலக்கிக்கொள்ளப்பட இருக்கின்றன.

“எரிடிரியா, தன் அண்டை நாடுகளுடன் வெறுப்பு வளர்க்காமல் நல்லுறவை பேணினால் பொருளாதார தடைகள் நீக்கப்படும்” என்கிறார் ஆப்பிரிக்காவிலுள்ள அமெரிக்க அதிகாரி டிபோர் நாகி. எரிடிரியா, புரட்சிக்குழுக்களுடன் கொண்டிருந்த உறவு குறித்து ஐ.நா ஆராய்வதற்கும் அனுமதி தராமல் வம்பு செய்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

சூடானிலிருந்து ஆயுதங்கள் எரிடிரியாவுக்கு இறக்குமதியாகி வருவதை ஐ.நாவின் தடைகள் ஏதும் செய்யவில்லை. அதோடு 2009 ஆம் ஆண்டு எரிடிரியாவின் சுரங்கத்தொழிலில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தன. தற்போதுவரையும் கூட நெவ்சன் என்ற கனடா சுரங்கநிறுவனம் எரிடிரியாவில் செயல்படுவதை ஐ.நாவின் தடைகள் ஏதும் செய்யவில்லை. 1993 முதல் எரிடிரியாவை ஆளும் அதிபரின் இசையாஸின் மாறுதல் நாட்டிற்கு புத்துயிர் தந்துள்ளது.