ஓஷோ சொன்னால் என் தலையைக் கூட வெட்டக்கொடுத்திருப்பேன்! -மா.ஆ.ஷீலா



Image result for ma anand sheela






ஓஷோ சொன்னால் தலையைக்கூட வெட்டக் கொடுத்திருப்பேன்!

மா ஆனந்த் ஷீலா


1981 இல் ஓஷோ ஆசிரமம் பூனாவிலிருந்து எப்படி மாற்றப்பட்டது?


அப்போது இந்தியாவில் அவசரகாலநிலை அமலில் இருந்தது. நாங்கள் பக்தர்களுக்காக நிலம் வாங்கும் முனைப்பில் இருந்தோம் அதற்கு அரசு தடைவிதித்து விட்டது. ஆசிரமத்தில் இருந்த வெளிநாட்டுக்காரர்கள், இந்தியர்கள் என அனைவரும் பகவானோடு தங்கியிருக்க விரும்பினார்கள். அவர்களைத் தங்க வைக்க ஆசிரமம் வேண்டுமே?

தோட்டத்தின் பாதையில் கூட பல நாட்கள் நான் படுத்து தூங்கியுள்ளேன். காரணம் பகவானின் மீது கொண்ட அன்புதான். பின்னர் ஒரு நாள் பகவானிடம், இந்த நெருக்கடி நிலையைப் பொறுக்க முடியவில்லை. நாம் அமெரிக்காவுச்செல்வோம். அங்கு உங்களுக்கான இடத்தை தேடுவோம் என்றேன். அவரும் அந்த யோசனையை உடனே ஏற்றார். பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஏற்பாடு செய் என்றார்.

ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ஓஷோ உங்களை வேசி என்று அழைத்தார் என்கிறார்கள். அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

அப்போது எனக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் விலகியதால் ஏற்பட்ட விரக்தியால் அவர் அப்படி கூறியிருக்கலாம். அதன்பின்னர் ஓஷோ எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதம் எனக்கு கிடைக்கவில்லை. அன்றைய ஆசிரம நிர்வாகம் அதனை அழித்திருக்கலாம். நான் இன்றும் பகவானின் மீது பேரன்பு கொண்டிருக்கிறேன். அவர் என் வாழ்வில் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

நீங்கள் ஆசிரமத்தை விட்டு கிளம்பியது பற்றி பல்வேறு சர்ச்சைகள் இன்றுவரை உள்ளதே?

ஆசிரமத்தை விட்டு ஓடிவிட்டதாக கூறுவதைக் கேட்கிறீர்கள். பகவானிடம் விடைபெற்று பணிகளிலிருந்து விலகினேன். பின்னர் அங்கிருந்து கிளம்பியபோது, என்னை விமானநிலையத்தில் கொண்டுபோய் விட 300 பேர் திரண்டனர். பகவானுக்கு செயலாளராக அவரையும் ஆசிரமத்தையும் பாதுகாப்பது எனக்கு கடமையாக கூறப்பட்டது. அதனையே நான் செய்தேன். அவருடைய மருத்துவர்கள் அவருக்கு வேலியம் உள்ளிட்ட மருந்துகளைப் பரிந்துரைத்தனர். நான் இந்த மருந்துகளை கைவிட வலியுறுத்தினேன். அவர் கேட்கவில்லை. இதிலிருந்து தள்ளி நில் என்று கூறிவிட்டார்.

அமெரிக்காவில் உங்களை 39 மாதங்கள் சிறையில் அடைத்திருந்தார்கள். அந்த அனுபவங்களைக் கூறுங்கள். 

அங்கு செய்ய வேலைகள் ஏதுமில்லை. 15 மணிநேரம் தூங்குவது மட்டுமே என் வேலையாக இருந்தது. அந்த சூழ்நிலை என்னை மேலும் வலுப்படுத்தியது என்றே கூறவேண்டும். அமெரிக்காவில் கைதானது. ஜெர்மனியில் திடீர் கைது ஆகியவற்றுக்கு யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. நான்தான் பகவானைத் தேடிப்போனேன். அவரோடு தங்கியிருந்தேன். அவருக்காக என் தலையை கில்லட்டினில் கூட வைக்கத் தயார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட.

நன்றி: டைம்ஸ் அக்.2, 2019









பிரபலமான இடுகைகள்