அக்டோபரில் வரும் மாற்றங்கள் என்னென்ன? - பொருளாதாரம்!





Image result for economic





வங்கிகள் பெட்ரோல் டீசல் வாங்கினால் அளிக்கும் சலுகைகளை இனி தரமாட்டார்கள். அதாவது டெபிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு தரும் சலுகைகள் என புரிந்துகொள்ளுங்கள்.

வருவாய்த்துறை வரி வசூலில் தீவிரத்தை கடைபிடிக்கப்போவதில்லை. ஆவணத்திலுள்ள எண் தவறானது என்றாலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை தொடங்கும். அதற்குள் அதுதொடர்பான தவறுகளை சரிசெய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பனிரெண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த வரி 18 சதவீதமாக இருந்தது.


முன்னர் பாலீஷ் செய்த கற்கள், வைரங்களுக்கு விதிக்கப்பட்ட வரி 3 சதவீதமாக இருந்தது. இந்த வரி 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வைரங்களுக்கு இந்த வரி 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டின விளம்பரங்களைப் பார்த்து பரவசமாகி ஓடிப்போய் வாங்க முடியும்.

காபீன் கலக்கப்பட்ட பானங்கள் அனைத்தும் குபீர் விலையேற்றம் காணும். முன்னர் இருந்த 28 சதவீத வரி இனி 40 சதவீதமாக மாறும். வெளியில் நீங்கள் பார்ட்டி வைப்பதாக இருந்தால் இனி ஈஸிதான். காரணம் இதற்கான வரி 18 சதவீத த்திலிருந்து 5 சதவீதமாக குறைகிறது.


அக்டோபர் மாத த்திலிருந்து தொழில் தொடங்குபவர்களுக்கு வரி குறைய வாய்ப்புள்ளது. இனி அரசு இவர்களிடம் 15 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கும். வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ள பொருட்களுக்கான கடன் தவணைகள் மாற்றம் காணும்.



பிரபலமான இடுகைகள்