குழந்தைகளுக்கான வாசிக்க அற்புதமான மர்ம நூல்கள் !

 






குழந்தைகளுக்கான நூல்கள் 



பேட் கய்ஸ்
ஆரோன் பிளாபே
ஸ்காலஸ்டிக் பிரஸ்

பதினைந்து புத்தகங்களைக் கொண்ட தொகுப்பு. அனைத்திலும் சுறா தான், குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்களைப் போல பேசி பல்வேறு குற்றங்களை கண்டறிந்து தவறை ஏற்க வைக்கிறது. 




ஃபிரம் தி டெஸ்க் ஆஃப் ஜோ வாஷிங்டன் 
ஜேன் மார்க்ஸ் 
காத்தரின் டேகன் புக்ஸ் 

12 வயது சிறுமி தன் தந்தை குற்றம் செய்யாதவர் என்பதை நிரூபிக்க என்னென்ன விஷயங்களை செய்கிறாள் என்பதே கதை. உணர்ச்சிகரமான சம்பவங்கள் நூலில் நிறையவே உள்ளன. 




தி மேஜிக் மிஸ்ஃபிட்ஸ்
நீல் பேட்ரிக் ஹாரிஸ் 
ஓவியம் - லிஸி மர்லின், கைல் ஹில்டன்
லிட்டில் ப்ரௌன் புக்ஸ்

கார்டர் மற்றும் ஐந்த டீனேஜ் மந்திரவித்தை கலைஞர்கள் சேர்ந்து உலகின் பெரிய வைரத்தை கொள்ளையிலிருந்து எப்படி தப்புவிக்கிறார்கள் என்பதே கதை. நிறைய ஜோக்குகள், மந்திர வித்தைகள் என படிக்க சுவாரசியமான கதைகளைக் கொண்டுள்ள நூல் இது. 




தி மிஸ்டீரியஸ் பெனடிக்ட் சொசைட்டி
டிரென்டன் லீ ஸ்டீவர்ட்
ஓவியம் - கார்சன் எல்ஸ் 
லிட்டில் ப்ரௌன் புக்ஸ்

ஆதரவற்ற சிறுவர்கள், தங்கள் பள்ளியில் முதல்வராக உள்ள தீய சக்தியை எப்படி துப்பறிகிறார்கள், அவர் செய்யும் செயல்களை கண்டறிகிறார்கள் என்பதே முதல் பகுதி. நூல் முழுவதும் ஏராளமான புதிர்கள், மர்மம், சண்டைக்காட்சிகள் உள்ளன. 

the week junior










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்