எறும்புகளின் ரத்தம் உறிஞ்சும் மணல்பேய்! - குள்ளான் பூச்சியின் கதை!
கூம்பு வடிவக் குழியில் மணல்பேய்!
வீட்டுக்கு அருகில் கூட கூம்பு வடிவக் குழியில் வாழும் ஆன்ட்லயன் சாண்ட் பிட்டைப் பார்க்கலாம். இதற்கு, குள்ளான், மணல் பேய், டூடுல் பூச்சி என பல பெயர்கள் உண்டு. இதன் லார்வா நிலையில் மண் தரையில் குழிதோண்டி, கூம்பு வடிவ பொறியமைக்கும். அதில் விழுந்து மாட்டிக்கொள்ளும் எறும்புகள், பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது.
பெயர் ஆன்ட்லயன் சாண்ட் பிட் (Antlion Sandpit)
குடும்பம் :மைர்மெலியோன்டிடே(Myrmeleontidae)
வரிசை : நியூரோப்டெரா (Neuroptera)
அடையாளம்: கரும்பழுப்பு நிறம் கொண்டது.உடலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும். லார்வா நிலையில், உடல் பெரிதாக இருக்கும். சதுர வடிவத் தலையில் சிறிய உணர்கொம்புகள்உண்டு. நீளமான இரையைப் பிடிக்கும் பற்கள் இதன் அடையாளம். பற்களால் இரையை கீறி பிளந்து ரத்தம் உறிஞ்சும். முழுவளர்ச்சி அடைந்த நிலையில் நீண்ட உடலோடு, இரு சிறகுகள் இருக்கும். உடலை மறைத்து முடிகள் இருக்கும்.
எங்கு பார்க்கலாம்: உலகம் முழுக்க காணப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் காணப்படும் குள்ளான் பூச்சி வகை, யூரோப்பியன் யூரோலியோன் நாஸ்ட்ராஸ் (European Euroleon nostras)
உணவு: லார்வா இலையில் எறும்புகள், பூச்சிகள். வளர்ந்த நிலையில் மகரந்தம், தேன்
உடல் பாகங்கள் (லார்வா நிலை)
கால் (Leg), உணர்கொம்புகள் (Antenna), பற்கள் (Jaws), தலை (Head), வயிறு (Abdomen), மார்புப் பகுதி (Thorax)
லார்வா அளவு - 1.5 செ.மீ.
பொறி அமைப்பு (தோராயமான அளவு)
ஆழம் : 3 செ.மீ.
விட்டம் : 8 செ.மீ.
கூம்பு வடிவ குழி தோண்ட ஆகும் நேரம் - 15 நிமிடங்கள்
மண் அமைப்பு: மணல், செம்மண், பட்டுப்போன மரம், தோட்டமண், நிலக்கரி சாம்பல்
முட்டை வடிவ வயிற்றை கலப்பை போல பயன்படுத்தி, பின்புறமாக நகர்ந்து மண்ணில் கூம்பு வடிவ பொறி அமைப்பை உருவாக்குகிறது. இப்படி நகரும்போது முன்புறம் உள்ள பற்களை பயன்படுத்தி மணல் துகள்களை வேகமாக எடுத்து மேற்புறமாக வீசுகிறது.
எறும்புகள் அதிகம் வளை தோண்டியுள்ள இடத்தில் சிறு குழிகளை குள்ளான் பூச்சி உருவாக்குகிறது. ஒருமுறை குள்ளானின் பொறி அமைப்பில் எறும்புகள் சிக்கினால் மீள்வது கடினம். எறும்பு மேலிருந்து கீழே ஆழமான பள்ளத்தில் விழும். கீழே விழுந்த பரபரப்பில் உடனே மேலே ஏற முயலும்.
எறும்பின் அழுத்தம் காரணமாக குழியின் மையத்திலிருந்து மேலே வரும் குள்ளான் பூச்சி, மண் துகள்களை இரை மீது எறிகிறது. இதன் விளைவாக, மண் சரிவு ஏற்பட்டு இரை கீழே விழும். அதை குள்ளான் பிடித்து, இரையை செயலற்றுப் போக நச்சை அதன் உடலில் செலுத்துகிறது. பிறகு அதன் உடலை துளையிட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது.
அடுத்தநிலை
3 ஆண்டுகள் இப்படி லார்வா நிலையிலிருந்த பிறகே புழுக்கூடு (Cocoon) நிலையை அடைகிறது. இந்நிலையில் இருந்து 1 மாதத்திற்குப் பிறகு முழு வளர்ச்சியடைந்த நிலையை குள்ளான் பூச்சி எட்டுகிறது. குள்ளான் பூச்சியின் கூம்புவடிவக் குழி பெரியதாக இருப்பது, அதிக நாட்கள் உணவின்றி இருப்பதைக் குறிக்கிறது.
வாழ்க்கை சுழற்சி நிலைகள்
வளர்ந்த நிலை
இந்நிலையில் தான் முழு வளர்ச்சி அடைந்த குள்ளான் பூச்சி, இணை சேர்கிறது. இக்கட்டத்தில் உணவு கூட உண்பதில்லை.
முட்டை (Egg)
முட்டை மணலில் இடப்படுகிறது. இதில் பசைத்தன்மை உள்ளதால் முட்டையை சுற்றி மணல் துகள்களும், தூசிகளும் ஒட்டியிருக்கும்.
லார்வா (Larva)
மண்ணில் சிறு குழிகளைத் தோண்டி, அதில் விழும் எறும்புகளைப் பிடித்து உண்ணுகிறது
புழுக்கூடு (Cocoon)
இந்நிலையில் குள்ளான் பூச்சி முழு வளர்ச்சியடைகிறது
மேற்கோள் நூல், வலைத்தளங்கள்
https://aggie-horticulture.tamu.edu/galveston/beneficials/beneficial-32_ant_lion.htm
https://www.vikatan.com/literature/agriculture/69465-
https://www2.palomar.edu/users/warmstrong/pljuly97.htm
https://bugguide.net/node/view/137
https://phys.org/news/2021-09-antlions-sand-throwing-capture-prey.html
https://www.antlionpit.com/digpit2.mov.html
https://hortnews.extension.iastate.edu/antlions-and-doodlebugs
https://www.encyclopedia.com/plants-and-animals/zoology-and-veterinary-medicine/zoology-general/antlions
https://www.encyclopedia.com/plants-and-animals/zoology-and-veterinary-medicine/zoology-general/antlions
https://nzetc.victoria.ac.nz/tm/scholarly/tei-Gov07_01Rail-t1-body-d21.html
https://www.discovermagazine.com/planet-earth/making-a-sarlacc-pit-how-tiny-antlions-lay-the-best-traps
https://www.rhinorest.com/ant-lion/
கருத்துகள்
கருத்துரையிடுக