வலி நிவாரணிகளில் இது புதுசு! - ஓபியாய்டு அடிமைத்தனத்திற்கு தீர்வு!







வலிநிவாரணிகளில் இது புதுசு!

ஓபியாய்டுகளில் பயன்பாடு, அமெரிக்காவில் அடிமைப் பிரச்னை ஏற்படுத்தி வரும் நிலையில், அடிமைத்தனம் இல்லாத வலிநிவாரணிகளை ஆராய்ச்சிகள் தேடிவந்தனர். EMA401 என்ற வலிநிவாரணி நம்பிக்கை தருவதாக செயின்டன் லூயிசிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 64 ஆயிரம் இறப்புகள் வலிநிவாரணியாக பயன்பட்ட ஓபியாய்டு பயன்பாட்டினால் சம்பவித்துள்ளன. புதிய வலிநிவாரணியான EMA401 நரம்பு செல்களை தாக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. "நரம்பு மண்டலத்தை நோக்கி வலிநிவாரணிகள் செயல்படும். ஆனால் இம்மருந்து நோய் எதிர்ப்பு செல்களான மேக்ரோபேஜஸ் என்பதை குறிவைத்து செயல்படுகிறது" என்கிறார் ஆராய்ச்சியாளர் டி.பி. மொகபத்ரா. ரத்தநாளங்களைக் கட்டுப்படுத்தி(Angiotensin) வலியைத் தீர்ப்பதில் புதுவிதமாக செயல்படும் இம்மருந்து ஓபியாய்டுகளின் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இதன் விளைவாக நீண்டகால நரம்புமண்டல பிரச்னைகளுக்கேற்ற வலிநிவாரணியாக பயன்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.