தலைசுற்றல் தகவல்கள்!






வெர்டிகோ எனும் விநோதம்!


நிற்கிறோம் அல்லது விழுகிறோம் என்ற உணர்ச்சியை மூளைக்கு கடத்துவதில் கண்கள், காது உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்னையே தலைசுற்றல். "இப்பிரச்னை உள்ளவர்களுக்கு தலைச்சுற்றலோடு குமட்டல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படும்" என்கிறார் நரம்பியல் வல்லுநர் டேவிட் ஸீ.  

அமெரிக்காவில் 40 வயதைக் கடந்த மூன்றில் ஒருபகுதியினர் வெர்டிகோ பாதிப்பை சந்தித்துள்ளனர். சராசரியாக 69 மில்லியன் மக்கள் இப்பாதிப்பை வாழ்வில் ஒருமுறையேனும் உணர்ந்துள்ளனர். பேஸ்கெட்பால் வீரர் பாவ் காசல், கோல்ஃப் வீரர் ஜாசன் டே ஆகியோருக்கு தலைச்சுற்றல் பாதிப்பு உண்டு.

வயதாகும்போது ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைவு, வைட்டமின் டி குறைபாடு ஆகியவற்றின் விளைவாக பெண்களுக்கு வெர்ட்டிகோ பாதிப்பு ஆண்களை விட அதிகம் உள்ளது.

திடீரென ஏற்படும் தலைச்சுற்றல் பாதிப்பு, மனப்பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. நீண்டகால நோக்கிலும் தலைச்சுற்றல் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதால் தினசரி பணிகளை செய்யமுடியாமல் இந்நோயாளிகள் தடுமாறுவார்கள். குறைந்த உப்பு உணவுகள், மெக்லைஸைன்(meclizine) உள்ளிட்ட மருந்துகள் இதற்கு உதவும்.