ஸ்டார்ட்அப் மந்திரம் 2 வெளியீடு!
இனிய நண்பர்களுக்கு,
குங்குமம் இதழில் வணிகத்தொடர் ஒன்றை எழுத ஆசிரியர் கே.என்.எஸ். ஊக்குவித்தார். ஆனால் அதற்கான சூழலும் தைரியமும் எனக்கு உண்டா என்பதில் அச்சமிருந்தது. மேலும் அப்போது ஸ்டார்ட்அப் மந்திரம் தொடரை எழுதிக்கொண்டிருந்தேன். செய்வதை திருந்தச்செய்வோம் என குங்குமம் வாய்ப்பை மறுத்துவிட்டு முத்தாரத்தி கவனம் செலுத்தினேன்.
ஸ்டார்ட்அப் மந்திரம் 2 , ஸ்டார்ட்அப் ஐடியா வின் செயலாக்கம், அதில் ஏற்படும் பிரச்னைகள், முதலீடு பெறுவது எப்படி, நிறுவனத்தில் ஏற்படும் பதவி விலகல்கள் உள்ளிட்டவற்றை பற்றி உரையாடுகிறது. புத்தகத்தை படித்துவிட்டு தொழிலில் ஜெயிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் தொழில் தொடங்குவதற்கான அடிப்படை அறிவை புத்தகம் வழங்கும். காலத்திற்கேற்ப பல்வேறு நூல்கள் தொழில்களை முன்னகர்த்த உதவும் எனபதை கவனத்தில் கொள்வது அவசியம்.
ஸ்டார்ட்அப் மந்திரம் லோகோவை வடிவமைத்த டிசைனர் திலீப் பிரசாந்த், சீரியல் பார்த்துக்கொண்டே தொடரை டிசைன் செய்த வடிவமைப்பாளர் சூர்யக்குமார், நீ ஆயிரம் தொடரை எழுதினாலும் அதில் நான் தப்பு கண்டுபிடிப்பேன் என அடம்பிடித்து தொடரின் பிழைகளை சுட்டிக்காண்பித்து ஐரோப்பிய ஆசான் சண்முகவேல் ஐயா ஆகியோர் இல்லையென்றால் இத்தொடர் உருவாகியிருக்காது. இவர்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. ஆனால் இப்போது என்னிடம் மிஞ்சுவது அது ஒன்றுமட்டுமே.
இணைய லிங்க் இதோ!
https://tamil.pratilipi.com/story/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2-CL0dyQwOkswY