இந்திய குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு!
யார் இந்தியர்கள்?
2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய மோடி, மேற்கு வங்காளத்தின் செரம்பூரில் பேசினார். மே 2016 க்குப் பிறகு வங்கதேச அகதி மக்கள் கிளம்புவதற்கு தயாராக இருங்கள் என்று பேசினார்.
நாடு, வீடு, இனம் காப்பதற்கான உறுதிமொழியை 2016 ஆம் ஆண்டு சொன்ன பாஜக அரசு, குடியுரிமை சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜூலை அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், பௌத்தர் ஆகியோரையும், டிச.31,2014 என்ற தேதிக்கு முன் அடைக்கலமானவர்களையும் இந்தியர்களாக அங்கீகரிக்கிறது. சட்டவிரோத அகதிகளுக்கும் குடிமக்கள் அந்தஸ்து வழங்குவது அசாம் மாநில மக்களால் வரவேற்கப்படவில்லை. இது அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவை மீறியது என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.
நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தியதற்காக ஃபைன் காட்டியிருந்தாலும் குடியுரிமையை அரசு ரத்து செய்யமுடியும் என்ற வாய்ப்பு உள்ளது. அசாமில் பாஜகவின் கூட்டணிக்கட்சியான அசோம் கன பரிஷத் இச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறது.