ரோமில் டூப்ளிகேட் ரோமியோ! -பூரி ஜெகன்னாத்தின் கதைதானா இது?
Directed by | Gopi Ganesh |
---|---|
Produced by | Dorai Swamy |
Written by | Puri Jagannadh |
Starring | Sairam Shankar Adonika Ravi Teja |
Music by | Sunil Kashyap |
Cinematography | P.G. Vinda |
Edited by | Navin Nooli |
ரோம் நகரில் எடுக்கப்பட்ட படம் என்பதைத் தாண்டி படத்தில் ஈர்ப்பது ஹீரோயின் அடோனிகாவின் குழந்தைதனம்தான். கதையை எழுதியிருப்பது பூரி ஜெகன்னாத் என பெயர் போடுகிறார்கள். கதை? சிறுவயதிலிருந்து காதலிக்கும் பெண்ணை விபத்தில் பறிகொடுத்த கிட்டு, ஐரோப்பாவில் சமந்தா வடிவில் காதலியை மீண்டும் சந்திக்கிறார். சமந்தா, தந்தையின் விருப்பத்தின் பேரில் இன்னொருவரை காதலிக்கிறார். சமந்தாவை கவர கிட்டு ஆடும் ஆட்டம்தான் ரோமியா.
ஹீரோ சாய்ராம் ஷங்கர். படம் முழுக்க ஒரே லுக்கில் வருபவர் செய்வதெல்லாம் பிரகாஷ்ராஜ் வேலைகள். ஹீரோயினின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு பிளாஷ்பேக் கதை சொல்லுவது. வெரோனாவில் பெண்ணின் மார்பில் இருகைகளை வைத்துக்கொண்டு அடோனாவை மிரட்டுவது முடியல சாரே. பூரிஜெகன்னாத்தின் ஹீரோ எப்படி டிரெஸ் செய்திருப்பார். அதேதான். லைட்டாக ஹிப்பி போலவே இருப்பார். இங்கிலீஸ் ஆட்களை பெண்டை கழற்றுவார் யெஸ் அனைத்தும் இப்படத்தில் உண்டு. இதில் இடுப்பில் கட்டும் பெல்டை வெவ்வேறு சட்டையில் இணைத்து புஜத்தில் கட்டியவாறு ஹீரோ வருகிறார்.
பிற தெலுங்கு கேரக்டர்களையெல்லாம் ஹைதராபாத்திலேயே விட்டுவிட்டு வந்ததால் அனைவரும் செலவு மிச்சம் என போனிலேயே பேசுகிறார்கள். அலி, ரவிதேஜா, பிரகதி என நீளும் பட்டியலில் அடோனாவின் காதலன் சுப்பாராஜூவும் சேருகிறார். அரே பாப்ரே. அதிலும் கிளைமேக்ஸில் அடோனாவுக்கு நிறைய யோசித்து பார்த்து வரும் காதலை என்னவென்று சொல்ல? ஆசம் பாஸ்! சுனில் காஷ்யப்பின் இசை இப்படத்தில் ஒரு பாடலைக்கூட ரசித்து கேட்கமுடியவில்லை. இவரும் ஜாலி ட்ரிப்பின் இடையே மியூஜிக் போட்டிருப்பார் போல. பாடல்களைக் கேட்கும்போதே ஹெட்போன் காதிலிருந்து தானாக கழன்றுவந்து விடுகிறது.
பாரீன் டூர் போனபிறகு கதை எழுதியிருப்பார்கள் போல, எதுவுமே ஒட்டவில்லை. பாடாவதி கதையிலும் பார்க்கும்படி இருப்பது அடோனாவின் பளீர் குழந்தைத்தன அழகுதான். லொகேஷன்களைத் தவிர படத்தில் உருப்படியாக வேறொன்றுமில்லை.
-ரோனி