காரில் காணாமல் போன கவிஞர்!
காணாமல் போன கவிஞர்!
1955 ஆம்
ஆண்டு கோல்டன் பிரிட்ஜ் அருகே கார் ஒன்று நின்றிருந்தது. எஞ்சினின்
சாவியோடு இருந்த காரில் யாருமில்லை. அமெரிக்க கவிஞர் கீஸ் என்பவருக்கு
சொந்தமானது என கண்டறியப்பட்டது தவிர இன்றுவரை அக்கவிஞர் எங்கு போனார்? என்ன ஆனது அவருக்கு என காவல்துறையால் கண்டறிய முடியவில்லை.
1914 ஆம் ஆண்டு நெப்ராஸ்காவில் பிறந்த
கீஸ் இன்றும் கவிதைகளுக்காக நினைகூரப்படும் ஆளுமை. எலிசபெத் பிஷப்,
ராபர்ட் லோவெல் உள்ளிட்டோரோடு ஒப்பிடும் அளவு பெரிய கவிஞர் அல்ல இவர்.
இவர் பற்றிய இரங்கல் குறிப்பு தவிர பெரியளவு தகவல்கள் இலக்கிய வட்டாரங்களில்
கிடைக்கவில்லை. பல்வேறு கவிஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்தார்
கீஸ் என்கிறார் சக கவிஞரான கியோயா. 1940 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்படாத
நாவல் ஒன்றையும் எழுதியிருந்தார் கீஸ். மதுவுக்கு அடிமையான மனைவி,
ஆளுமை பிறழ்வு குறைபாடு என தவித்தாலும் இவரின் நான்கு கவிதைகள் நியூயார்க்கர்
இதழில் பிரசுரமாகியுள்ளது. காரிலிருந்து இறங்கிய கீஸ் பாலத்திலிருந்து
கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என யூகங்கள் நிலவினாலும் உறுதிப்படுத்த கீஸின்
உடல் கிடைக்கவில்லை. "எழுத்தில் தன்னை உறுதியான ஆளுமையாக
நிலைநிறுத்திய கீஸ், சட்டென காணாமல் போவது நம்பவே முடியாத ஒன்று"
என்கிறார் கியோயா.