"பெண்கள் உரிமை காகித்ததில் மட்டும்தான் மிச்சமிருக்கிறது"



Image result for tunisia women's rights 2018


பெண்கள் உரிமை!

துனிசியாவில் நடைமுறையிலுள்ள வல்லுறவு பாதுகாப்பு சட்டம் எழுபது எண்பதுகளில் வந்த தமிழ்சினிமாவை நினைவுபடுத்தும். தான் கற்பழித்த பெண்ணை அதே ஆண் மணம் செய்துகொண்டால் சிறைதண்டனை கிடையாது எனும் காருண்யத்தை அரசு பெண்களுக்கு வழங்குகிறது. 

48% பெண்கள் துனிசியாவில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது 2010 ஆம் ஆண்டு செய்த தேசிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. “காகிதத்தில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள பெண்களுக்கான சட்டம் துனிசியாவின் சிறப்பு” என்கிறார் மனித உரிமை கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆம்னா குலேலாலி.

ஏடிஎஃப்டி(ATFD-Tunisian Association of Democratic Women) எனும் பெண்களுக்கான அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து மக்களை ஒருங்கிணைத்து போராடி வருகிறது. “பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளே, திருமணம் என்றால் வன்முறை சகஜம் என்றால் நீதி எப்படி கிடைக்கும்?” என்கிறார் வழக்குரைஞரான ஹாயட் ஜாஸர்.

 இவ்வாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் அமுலானால் இதற்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. பல்வேறு நகரங்களில் வசிக்கும் பெண்களும் தங்களுக்கான உரிமைகளை அறியும் வகையில் சல்மா பெல்ஹாசின் உள்ளிட்ட பெண்ணுரிமையாளர்கள் ஆப் உருவாக்கி விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றனர்.
    

பிரபலமான இடுகைகள்