போகோ ஹராமிற்கு எதிராக ஆசிரியர்!




Boko Haram Offers to Exchange Girls for Militants - JetMag.com



அநீதிக்கு எதிராக ஆசிரியர்!

நைஜீரியாவில் நடைபெறும் போகோ ஹராம் பற்றி சிலர் மட்டுமே பேசுகிறார்கள். “உள்நாட்டுப்போரால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அழிந்தநிலையில் முகத்திரை அணியாத குற்றத்திற்காக எத்தனை பெண்களை பலிகொடுக்க முடியும்?” என துணிச்சலாக பேசுகிறார் ஆசிரியரான ஹம்சது அலாமின்.

 30 ஆண்டு ஆசிரியர் பணியை 2016 ஆம் ஆண்டு கைவிட்டு போகோ ஹராம் வன்முறைக்கு எதிரான புரட்சியாளராக மாறியுள்ளார்.

வசதியான கனூரி பழங்குடிக்குடும்பத்தில் பிறந்தவர், தனது சமூகத்திலுள்ள குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த தொடங்கினார். 2013 ஆம் ஆணுட போர் தொடங்கும் முன்பு போகோஹராம் குழுவினர் மறைந்திருந்து ராணுவத்தின் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தி வந்தனர். மூர்க்கமான ராணுவம் பழங்குடிகளின் குழந்தைகளை வேட்டையாடி கைது  செய்து வீடுகளை தரைமட்டமாக்கியது. அமைதி தூதராக செயல்பட்ட அலாமின் மிட்செல் ஒபாமா அறைகூவல் விடுத்த “Bring Back Our Girls” என்ற திட்டத்தையும் ஒருங்கிணைத்துள்ளார். 7 லட்சம் பேர்களுக்கு மேல் நைஜீரியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிக்கை கூறுகிறது. அலாமின் அமைதி பேச்சுவார்த்தையில் அரசு ஆர்வம் காட்டவில்லை. நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு கல்வியளித்து வருகிறார் அலாமின்.

பிரபலமான இடுகைகள்