ஜிம்பாவேயை அழிக்கும் புகையிலை!




Image result for zimbabwe tobacco


உருக்குலைக்கும் புகையிலை!

ஜிம்பாவே நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள எமர்சன் நாங்காவா, விவசாயம்தான் நாட்டின் பொருளாதார ஆதாரம் என உத்தரவிட புகையிலை விவசாயம் குழந்தைகளையும் தொழிலாளர்களாக மாற்றி மூர்க்கமாக நடைபோடத்தொடங்கிவிட்டது. புகையிலை வணிக மதிப்பு 933.7 மில்லியன்(2016) தோராய மதிப்பில் 93.3 கோடி.

புகையிலையை கையாளும்போது நிகோடின் உடலில் இறங்குவதால் வாந்தி, குமட்டல், தலைசுற்றல், தலைவலி ஆகியவை ஏற்படும். குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும் நிக்கோடின் அவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஜிம்பாவேயில் கல்வி இலவசம் கிடையாது என்பதால் காசு இருந்தால் மட்டுமே கல்வி சாத்தியம். பலருக்கும் புகையிலை விற்று பெறும் பணத்தில்தான் புத்தகமே வாங்கிப்படிக்கிறார்கள். சோற்றுக்கே காசில்லாத நிலையில் கைக்கு கையுறையும், உடலுக்கு பாதுகாப்பான கோட்டும் வாங்கி அணிவது ஏழை விவசாயிக்கு எப்படி சாத்தியமாகும்? ஆனால் அனைத்தும் விவசாயிக்கு கம்பெனிகள் வழங்கும் அக்ரிமெண்டில் தெளிவாக உள்ளது. அரசுக்கும் கொள்ளையர்களுக்கும் வேறுபாடில்லாத நிலத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?




பிரபலமான இடுகைகள்