டிஸ்னியை நெ.1 மாற்றிய அமெரிக்கர்!


பொழுதுபோக்கின் Boss!


Related image




இந்த ஆண்டில் மட்டும் டிஸ்னி பிளாக் பாந்தர், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், இன்கிரடிபிள்ஸ் 2 மூலம் லம்பாக சம்பாதித்துள்ளது. அத்தனைக்கும் காரணம், 2005 ஆம்ஆண்டு டிஸ்னி இயக்குநரான பாப் ஐகெர். எவர்க்ரீன் பத்து படங்களின் வரிசையில் டிஸ்னியின் ஐந்து படங்கள் இடம்பெற்ற சாதனையோடு, 8.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான டிக்கெட்டுகளை விற்று வசூலில் ராட்சஸ சாதனை செய்திருக்கிறது.



பிக்ஸார், மார்வெல், லூகாஸ்பிலிம், ஃபாக்ஸ் வரை பலரும் செய்யத்தயங்கி டீல்களை ஸ்மார்ட்டாக முடித்து எதிர்காலத்திலும் டிஸ்னி ஹாலிவுட்டில் நிலைத்து நிற்க உதவியிருக்கிறார் பொழுதுபோக்கின் பாஸ் பாப் ஐகெர். டெக் கம்பெனி போல டிஸ்னியை நடத்தும் பாப் ஐகெர் சீக்வல் படங்களின் தயாரிப்பை பிரபலப்படுத்தியுள்ளார். மார்வெல், ஸ்டார்வார்ஸ், பிக்ஸார், ஃபாக்ஸ் என அத்தனை நிறுவனங்களின் ஐகான் கதாபாத்திரங்களையும் டிஸ்னி தீம்பார்க், டிவி அனிமேஷன் என அத்தனையிலும் நுழைத்து விட்டார்.
டிவி தவிர்த்து இணையச்சேவையிலும் டிஸ்னி விரைவில் தலைகாட்ட தயாரிப்பு வேலைகளில் உள்ளது. இதில் டிஸ்னியின் அனைத்து படங்களும் ஒளிப்பரப்பப்பட உள்ளது. அதிகாலை 4.15 மணிக்கு எழும் பாப் ஐகெர், கிரியேட்டிவிட்டியான மனிதர்களுடன் செலவிடும் தினமே மதிப்பானது என்கிறார்.