க்ரைம் ஆய்வுகள்!


அமெரிக்காவின் க்ரைம் ஆய்வு!


Image result for america crime


அமெரிக்காவில் 1929 ஆம் ஆண்டு முதலாக  Uniform Crime Reports (UCR),  எனும் குற்றப்பதிவேடு ்பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை 18 ஆயிரம் அரசு அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. தீவிர குற்றங்களை பகுதி 1, சாதாரண குற்றங்களை பகுதி 2 என பிரித்து வைத்துள்ளனர். ஆனால் இவற்றில் குழப்பம் ஏற்படுவதால் எந்நகரங்களில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறதென கண்டறிவதில் காவல்துறையினர் தடுமாறி வருகின்றனர்.

காவல்துறை 6 ஆயிரத்து 461 குற்றச்சம்பவங்கள் நடந்த செயின்ட் லூயிஸ் நகரை ஆபத்தான நகரம் என குற்றம்சாட்ட, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிகாகோ பிரச்னைக்குரிய நகரம் என கூறிவருகிறார். சிகாகோ நகரில் 2014-17 காலகட்டத்தில் வன்முறை சம்பவங்கள் 24.27 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இதில் கொலைகளின் சதவிகிதம் 59.53. குற்ற அறிக்கையின் அளவீட்டு பிரச்னைகளால் 0.4 சதவிகிதமளவு குற்றங்கள் குறைந்தாலும் சிகாகோ, செயின்ட் லூயிஸ் நகரங்களில் அவற்றை அதிகரித்து காட்டுகிறது. 2020 ஆம்ஆண்டு எஃப்பிஐயின் National Incident-Based Reporting System,   அமலுக்கு வரவிருக்கிறது. இது குற்றசம்பவங்களை சரியாக கணிக்க உதவக்கூடும்.