பெயர் மாற்றினால் வளர்ச்சியா?





Image result for UP name change politics


இந்திய அரசு கடந்த ஓராண்டில் மட்டும் 25 நகரங்கள் கிராமங்கள் பெயர்களை மாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அடுத்து மோடியின் பெயரை இரண்டாவது வாஜ்பாய் என்று கூட மாற்ற வாய்ப்புண்டு. இந்தியாவில் புதுமைகள் நடப்பது புதியதா என்ன?

மேற்கு வங்கம், வங்கமாக மாறியது(வங்கதேசம் நினைவுக்கு வருகிறதா?) அனைவருக்கும் தெரியும். அலகாபாத், ஃபைஸாபாத் என தொடர்ச்சியாக பெயர் மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதியை வாரி வழங்கி வருகிறது. ஊரின் பெயர் என்பது அப்பகுதியின் கலாசாரத்தை பிறருக்கு புரிய வைக்கும் விதமாக வைக்கப்படுகிற பெயர். அலகாபாத் - பிரக்யாராஜ், ஃபைஜாபாத் - அயோத்தியா என உத்தரப்பிரதேசம் பெயர் மாற்றும் வேட்கையை அதிகரித்துள்ளது.

ராஜமுந்திரி - ராஜமகேந்திரவரம்(ஆந்திரா), அப்துல்கலாம் தீவு(ஒடிஷா), அரீகோடு(கேரளா) சன்புரே(நாகலாந்து) ஆகியவை மக்கள் ஏற்றுக்கொண்ட பெயர்மாற்றங்கள்தான்.

நகரின் அல்லது கிராமத்தின் பெயரை மாற்ற எக்ஸிக்யூட்டிவ் ஆர்டரை அரசிடம் பெறுவது அவசியம்.  ரயில்வே, தபால்துறை, சர்வே ஆஃப் இந்தியா ஆகிய துறைகளிடம் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழையும் பெற்றால் மட்டுமே நகரின் பெயர்களை மாற்றமுடியும்.

இந்துவெறியில் அமீர்கானை அமரேஷ் குமாராக மாற்றினால் என்னாகும்? குளறுபடியில் நம் மூளைதான் புண்ணாகும்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்