குளோனிங் எருமை! - சத்தீஸ்கர் அரசு சாதனை
குளோனிங் எருமை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில
விலங்கான காட்டு எருமையை குளோனிங் முறையில் உருவாக்கி விலங்கு அழிவை தடுத்து நிறுத்த
முயற்சித்து வருகின்றனர்.
உடந்தி- சீதாநதி காப்பகத்தில்
2015 ஆம் ஆண்டு ஹரியானாவிலுள்ள கர்னாலில் NDRI மையத்தில் தீபாஷா என்ற காட்டு எருமை
குளோனிங் முறையில் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. சத்தீஸ்கரிலுள்ள வனக்காப்பகத்தில்
தற்போது பனிரெண்டு காட்டு எருமைகள் மட்டுமே உயிருடன் உள்ளன. 2006 ஆம் ஆண்டு மத்திய
இந்தியாவில் உயிர்வாழ்ந்த ஐந்து காட்டு எருமைகளில் இரண்டு பெண், ஒரு ஆண் என காட்டு
எருமைகள் உயிர்பிழைத்தன. இவற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்த மூன்று எருமைக்கன்றுகளோடு
மாடுகள் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கிராமத்திலுள்ள
மாடுகள் மூலம் காட்டு எருமைகளுக்கு நோய்த்தொற்றைத் தடுக்க தடுப்பூசிகளையும் வனத்துறை
பயன்படுத்துகிறது. சத்தீஸ்கரிலுள்ள பீஜாபூர் இந்திராவதி, பமேத் ஆகிய காப்பகங்கள் மாவோயிஸ்டுகளில்
நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ளதால் வனத்துறையினர் காட்டு எருமைகளை கண்காணிப்பதில்
தடுமாறி வருகின்றனர்.