நச்சுக்களை முறிக்கும் ஜெல் மருந்து!
நச்சுக்களை தடுக்கும் ஜெல்!
பெங்களூருவிலுள்ள இன்ஸ்டெம் ஆராய்ச்சி
மைய ஆராய்ச்சியாளர்கள் உரம், பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பை தடுக்கும் ஜெல் ஒன்றை தயாரித்துள்ளனர்.
பூச்சிமருந்துகளை தக்க பாதுகாப்பு
உறைகளை அணியாமல் பயன்படுத்துபவர்கள் பின்னாளில் பல்வேறு விஷத்தாக்குதல்களால் நோய்களுக்கு
உள்ளாவதை பாலி ஆக்சைம் எனும் இந்த புதிய ஜெல் தடுக்க உதவும். மூளை மற்றும் நுரையீரலை
தாக்கும் பூச்சிக்கொல்லிகளின் ஆர்கனோபாஸ்பரஸ் வேதிப்பொருட்கள் தோலை துளைத்து உள்ளே
செல்வதை பாலி ஆக்சைம் தடுக்கும். “40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த ஜெல் ஆர்கனோபாஸ்பேட்களை
ரத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை ஆகியவற்றை தாக்குவதிலிருந்து காப்பாற்றுவதை
சோதனைகள் நிரூபித்துள்ளன” என்கிறார் ஆராய்ச்சியாளர் பிரவீன்குமார் வெமுலா.