பாதாளத்தில் பாயும் பாகிஸ்தான்!
பாதாளத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,
உலக நிதியகத்திடம் 12 பில்லியன் டாலர்களை கடனாக கேட்டு நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில்
உள்ளார்.
பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பு டாலருக்கு
எதிராக கீழிறங்க, நாட்டில் முதலீட்டாளர்களும் வெளியேறி வருகின்றனர். சீனா, சவுதி அரேபியா
உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெற்ற பல கோடிரூபாய் கடன்தொகை நாட்டை திவாலாகாமல் காத்து
வருகிறது. நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை அளவு 20 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில்
உலக நிதியகத்தின் கடனுதவி கிடைக்குமாக என்பது தெரியவில்லை.
அமெரிக்கா சீனாவை கடன்வலை மூலம்
கட்டுப்படுத்துவதாக விமர்சிக்க இம்ரான்கான் அந்த கருத்தை கெட்டியாக பிடித்து உள்நாட்டில்
அரசியல் செய்தாலும் பிரயோஜனம் ஒன்றுமில்லை. ஓபிஓஆர் திட்டத்தின் கீழ் 62 பில்லியன்
டாலர்களை சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் அதனை கட்டும் சுமை,
இம்ரான்கான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களின் மேல் விழும். அவசரகால நடவடிக்கையாக
சீனாவிடம் போட்ட பெரும் செலவிலான திட்டங்களை நிறுத்திவருகிறார் பாக்.பிரதமர் இம்ரான்கான்.
தூய முஸ்லீம் நாடாக பாகிஸ்தானை மாற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற வீடுகளை கட்டும் திட்டத்திற்கு
கடன் கிடைக்க உலக நிதியகத்திடம் வேண்டுகோளை முன்வைத்து காத்திருக்கிறார் பிரதமர்.