கழிவறைக்குழியில் கலெக்டர்!
கழிவறைக்குழியில்
கலெக்டர்!
இந்தியாவில் எந்த
கலெக்ட்ராவது தெலுங்கானா கலெக்டர் போல வேலை பார்க்க முடியுமா? ஆம். சுத்தம் செய்யும் ஆர்வக்கோளாறில் கழிவறைக்குழியில் இறங்கியிருக்கிறார்.
தெலுங்கானாவின்
மேடக் மாவட்ட கலெக்டரான கே.
தர்மா ரெட்டி, புனேவில் நடைபெற்ற ஸ்வட்ச்் பாரத்
தூய்மை திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றார். முகாமில் ஊழியர்
ஒருவர் உரமாக மாறும் கழிவு குறித்த பாடத்தை சொல்லித்தந்த அடுத்தநொடி பிராக்டிக்கலுக்கு
ரெடியாகி கழிவறைக் குழியில் இறங்கிவிட்டார் தர்மாரெட்டி. வெறும்
கையிலேயே உரமண்ணை அள்ளி சுத்தம் செய்து ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஏறத்தாழ திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலம் என்ற
பெருமையை அடையும் பாதையில் உள்ளது. தற்போது இந்தியாவில் கேரளா,
குஜராத், இமாச்சலப் பிரதேசம் உட்பட பதினொரு மாநிலங்கள்
திறந்தவெளி கழிப்பறை அகற்றிய அந்தஸ்தைப் பெற்றுள்ளன.