ஸ்வட்ச்பாரத் திட்டம் வெற்றியா? தோல்வியா?
சுகாதாரப் போதாமை!
இந்திய
அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டம் நிறைவடைய இரு ஆண்டுகள் உள்ள நிலையில்
62.5% பகுதிகளில் இன்னும் கழிவறை இல்லாத அவலநிலை நிலவுவதை அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.
ஜம்மு
காஷ்மீர்(5.6%), பீகார்(7.74%), உத்தரப்பிரதேசம்(14.96%) ஆகிய விகிதங்களிலேயே திறந்தவெளி கழிப்பிடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேவேளையின் வீட்டில் அமைக்கப்படும் கழிவறைகளின் எண்ணிக்கை 2014-2017 காலகட்டத்தில் 38.7%-71.12% மாக உயர்ந்துள்ளது. "மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்திற்கு மாநில அரசுகளின் நிதியுதவிகள் பெருமளவு கிடைக்கவில்லை" என குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை கடந்தாண்டு ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கையில் தகவல் கூறியுள்ளது.
மேலும் இந்தியாஸ்பெண்ட செய்த ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகள்,
அரசு பத்திரிகையில் வெளியிட்ட தகவல்களோடு பொருந்தவில்லை என்பதும் இதில் முக்கியமானது.