எமர்ஜென்சி காலத்தில் மக்களைக் காப்பாற்றும் இமோஜி!


Image result for emoji images



உலகைக் காப்பாற்றுமா இமோஜி?

இமோஜி உலகைக் காப்பாற்றும் என்று சொன்னால் பல் முளைக்காத குழந்தை கூட ஹவ்? என்று கேட்கும். ஆபத்துக்காலங்களில் குறிப்பாக நிலநடுக்க காலங்களில் நிலப்பரப்பு வேறுபாடு கடந்து உதவுவது இமோஜிக்கள் மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் கூறுவதோடு அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இதனை யூனிகோட் முறையில் அமைக்கவும் லாபி செய்து வருகின்றனர்.


"மூன்றில் ஒரு சதவிகித நாடுகள் நிலநடுக்க ஆபத்துக்குள்ளாகும் அபாயத்தை கொண்டுள்ளன. அனைத்து நாடுகளிலும் தொடர்புகொள்ள இமோஜி சரியான தீர்வு" என்கிறார் சவுத்தாம்டன் பல்கலையைச் சேர்ந்த நில அதிர்வு வல்லுநர் ஸ்டீபன் ஹிக்ஸ். Emoji-quake பிரசாரத்தை உலகெங்கும் செய்துவருகிறார் ஸ்டீபன். நிலநடுக்கம் என்பது எரிமலை வெடிப்பு போல வெளித்தெரிந்து நடப்பதில்லை. திடீரென நடைபெறுவது என்பதால் இமோஜி மூலம் உடனடியாக தகவல் தெரிவித்து உயிர்களைக் காக்கமுடியும். emerji  என்ற பெயரில் சூழல் பிரச்னைகளை சொல்லும் இமோஜிகளை சாராடீன் என்ற அமெரிக்க கிராபிக் டிசைனர் உருவாக்கியுள்ளார். பல்வேறு இமோஜிகளை இணைத்து செய்தி பரிமாறுவதில் தடுமாற்றங்கள் உள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது