நாடுகளை முடக்கும் பொருளாதாரத்தடை தந்திரம்!
தந்திரத்தடை!
அமெரிக்கா பிற நாடுகளை தன் வழிக்கு
கொண்டுவரும் தந்திரமாக கடைபிடித்து வரும் பழைய டெக்னிக், பொருளாதார தடைகள். ரஷ்யா மீது
மட்டுமல்ல இரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் மீதும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார
தடைகளை விதித்திருப்பதோடு ஐ.நா சபை மூலம் பிற நாடுகளையும் தடை விதிக்க தூண்டி வருகிறது.
நவம்பர் முதல் இரான் மீதான பொருளாதார
தடைகள் இறுக்கமாவது உலகின் அமைதிக்கு நன்மை அல்ல. அமெரிக்காவின் தடைகள் அனைத்தும் அதன்
தனிப்பட்ட நலன்களைச் சார்ந்ததே. இரான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிக உறவு
கொண்ட நாடுகளின் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க ரெடியாகி வருகிறது. உலகநாடுகளின்
கூட்டணியே தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை எதிர்க்க ஒரே வழி. ஆனால் அமெரிக்கா வணிகரீதியாக
ஐரோப்பா, சீனா, கனடா, மெக்சிகோ ஆகியோருடன் முரண்பட்டும் தனக்கு எதிரான கருத்தியல்களை
கொண்ட நாடுகளை தனிமைப்படுத்தவும் முயன்று வருகிறது.”எனக்கு வேண்டியது அமைதிதான்” என
ட்ரம்ப் ட்விட்டரில் கூறிவது உண்மையா என அவரது நெஞ்சே உண்மையறியும்.