பெண்களின் அவசிய பிரச்னைக்கு தீர்வு!
பெண்களுக்கு
நிம்மதி!
உலகிலுள்ள 176 மில்லியன் பெண்களை வாட்டிய பிரச்னைக்கான தீர்வு அது. Endometriosis(பெண்களின்
கருப்பையில், கருப்பை குழாயில் ஏற்படும் அதீத திசுவளர்ச்சி) பிரச்னை 6 வயது சிறுமி முதல் 60
வயது பெண்மணி வரை வாட்டிக்கொண்டிருக்கிறது. வலியும் மாதவிலக்கு சீரற்று இருப்பதும்
இதன் முக்கிய அறிகுறி.
இந்நோயை எளிதில்
கண்டுபிடிப்பதற்கான சோதனையை தன் டாட்லேப் மூலம் கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவின்
சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஹீதர் போவர்மன். “உலகின் அரைப்பகுதி மக்கள்தொகை
பெண்கள்தான். அவர்களுக்கு நிம்மதி தரும் கண்டுபிடிப்பு இது” என்கிறார் ஹீதர்.
பெண்களின் எச்சில் மற்றும் ரத்தம் மூலம் அவர்களின் கருப்பை திசு வளர்ச்சியை
கணக்கிட்டு அறிக்கையை மருத்துவர்களுக்கு அனுப்பிவிடுகிறது டாட்லேப். இவர்களின்
கண்டுபிடிப்பான டாட்எண்டோ மூலம் மாதிரிகளை சேகரித்து அனுப்பி நோயை முன்கூட்டியே
அறிந்து அறுவைசிகிச்சை செய்து அதீத திசுவளர்ச்சியிலிருந்து தப்பிக்கலாம்.
கலிஃபோர்னியாவில் இளங்கலையும், ஹார்வர்டில் முதுகலையும் வென்ற ஹீதர், 2010 ஆம்
ஆண்டு வெள்ளை மாளிகையில் அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான மசோதாவில்
பணியாற்றியவர்.