பட்டினியைப் போக்கும் கோதுமை ஆராய்ச்சி!







கோதுமை ஆராய்ச்சி!

இருபது நாடுகளிலுள்ள 200 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக கோதுமையின் மரபணுக்களை ஒன்றாக தொகுத்துள்ளனர். ஹெர்குலியன் சவால் எனும் இம்முயற்சி சவாலான ஒன்று. இறைச்சியை விட அதிக புரத சத்துக்கு உதவும் கோதுமை உடலுக்கு தேவையான 20 சதவிகித கலோரியை அளிக்கிறது.

நல்ல மகசூல் தரும் கோதுமை வித்தை பயிரிட்டால் எளிதில் மக்களின் பசி போக்கலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் மரபணு வேட்டைக்கு காரணம். 21 கோதுமை குரோசோம்களை தொகுத்தவர்கள் 1 லட்சம் மரபணுக்களை இடமறிந்து கண்டுபிடித்துள்ளனர். “நோய், பஞ்சம் உள்ளிட்ட சூழல்களில் கோதுமை அழிந்துபோகாமல் இருக்க அதன் மரபணுக்களையும் இடத்தையும் தொகுக்கும் பணியை ஏற்றுச்செய்தோம்” என்கிறார் ஜான் ஐனெஸ் மையத்தின் மரபணுவியலாளர் கிரிஸ்டோபல் உவாய். அலர்ஜி பிரச்னையை தவிர்த்து கோதுமையை பயிரிடும் முயற்சிகளும் இதில் உண்டு. “உணவு பாதுகாப்பு மற்றும் சூழல் மாறுபாடு ஆகியவற்றுக்கேற்ப பயிரிடுவதற்கு மரபணு ஆராய்ச்சி முக்கியக்கருவி” என்கிறார் ஆராய்ச்சியாளர் ரிக்கார்டோ கான்சால்லெஸ்.


பிரபலமான இடுகைகள்