இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உணவில் தில்லுமுல்லு! - கலப்படத்தின் ஆபத்து

படம்
pixabay பாலில் வேதிப்பொருட்களை கலப்பது, கோதுமை மாவில் சோயா மாவு கலப்பு, எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்பு என கலப்படம் இல்லாத உணவு வணிகம் கிடையாது என்று ஆகிவிட்டது. வணிகத்திற்கு கருணை கிடையாது என்பதால் உணவில் பாரபட்சம் பார்க்காமல் கல், மண், மலிவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள். அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு மேட் இன் இந்தியா என்று பிரின்ட் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். சாதாரண உணவில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய சற்று கூர்மையான நாக்கும் அறிவும் தேவை. 2013ஆம் ஆண்டு உலகளவில் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சி என்று எழுதப்பட்ட டின்களில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. கறிகளில் என்ன தீண்டாமனை என அதிலும் கலப்படம் செய்து உலகளவில் மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையை தில்லாலங்கடி ஆட்கள் குலைத்தனர். பால் பொருட்களில் பலரும் தில்லுமுல்லு வேலைகளைச்செய்கிறார்கள். இன்று உங்கள் கையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை பால் பண்ணையில் நான்கு நாட்களுக்கு முன்னரே வேதிப்பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட ...

சிறந்த வணிகம் எது?

படம்
pixabay உலகம் முழுக்க நடைபெறும் வியாபாரம் பலதரப்பட்டது. முன்னர் பத்திரிகையாளர் சாய்நாத் தனது நூலில் எழுதியுள்ளது போல இடைத்தரகர்கள் விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடினர். இதனால் பல விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை கிடைக்காமல் தடுமாறினர். இதனைக் கண்ட அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். இதனை இன்று இணைய நிறுவனங்கள் மாற்றியுள்ளன. வணிக நடைமுறையில் ஃபேர் ட்ரேட் நடைமுறை முக்கியமானது. இதில் குறிப்பிட்ட விவசாய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பொருட்களை அளித்து விவசாயத்திற்கு உதவுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயியும், நிறுவனமும் பகிர்ந்துகொள்கின்றன. இதில் இடைத்தரகர்களின் பங்கு குறைவு. ஆனால் ஃபேர் ட்ரேட் எனும் வியாபாரத்திற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே இவ்வணிகத்தை செய்ய முடியும். இதற்கு மாற்று இல்லாமல் இல்லை. சந்தையில் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு நேரடியாக பொருட்களை விற்கிறார்கள் அல்லவா? அதுதான். ஃபேர் ட்ரேட் நடைமுறை உலகளவில் வெற்றி பெறுவதற்கான காரணம், இதன் வலைப்பின்னல் அமைப்புதான். 1. விவசாயிகளுக்கு தேவையான விளைபொருட்கள், உரங்கள் என உதவிகள் அனைத்...

புறாவாகி துப்பறியும் அமெரிக்காவின் உளவு ஏஜெண்ட் - ஸ்பைஸ் இன் டிஸ்கைஸ்

படம்
  ஏஜெண்ட் ரெஸ்லிங் உளவுத்துறை ஏஜெண்டுகளிலேயே தைரியமானவர். அனைத்து விஷயங்களையும் தனியாக சென்று ராணுவம் போல எதிரிகளைத் தாக்கி விஷயங்களை கொண்டு வருபவர். அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத எதிரியாக வருகிறார் ரோபோ ஹேண்ட். ரெஸ்லிங்கின் முகத்தை ஜெராக்ஸ் செய்து பல அரசு அதிகாரிகளை விஞ்ஞானிகளை போட்டுத்தள்ளுகிறார். கூடவே உளவுத்துறை ஏஜெண்டுகளின் டேட்டாபேஸை கொள்ளையடித்து அத்தனை பேரையும் அடையாளம் கண்டு கொல்லத் தொடங்குகிறார். இதனை ரெஸ்லிங் அறியாமல் இருக்கிறார். அவருக்கு விஷயம் புரிபடும்போது போலீஸ் அவரை கைது செய்ய கொலைவெறியோடு அலைகிறது.    இந்நிலையில் அவருக்கு ஆயுதங்களை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் இருக்கும் வால்டர், ரெஸ்லிங் அவனுடைய கருவிகளை பிடிக்கவில்லை என்று கூறியதால் வேலை இழக்கிறான். அதற்காக ரொம்பவெல்லாம் கவலைப்படவில்லை. கொரியன் காதல் படங்களைப்பார்த்துக்கொண்டு புறாக்களை வளர்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறான்,  ரெஸ்லிங் தனக்கு வால்டர் மட்டுமே உதவி செய்யமுடியும் என புரிந்துகொண்டு அவன் வீட்டுக்குப் போகிறார். அங்கு நடைபெறும் தாறுமாறு கோளாறுகளால் ரெ...

துப்பாக்கி மட்டுமே முழங்கும் ஆக்சன் படம்! - பேட்டில் ட்ரோன்

படம்
  பேட்டில் ட்ரோன் - ஆங்கிலம் 2018 இயக்கம் - மிட்ச் குட் ஒளிப்பதிவு இசை சிஐஏவில் கேப்டனாக இருந்த விலகியவர் ரெக்கர். இவர் காசு கொடுத்தால் சில நாடு கடந்த பிரச்னைகளை முடித்துக்கொடுக்கும் விஷயங்களைச் செய்கிறார். இவருக்கென துப்பாக்கி, மல்யுத்தம் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கொலைகாரக் கூட்டம் உள்ளது. இவர்கள் ரஷ்யாவில் ஒருவரைக் கொன்று பணக்காரர் ஒருவரை அமெரிக்க அரசுக்காக மீட்டு கொடுக்கின்றனர். ஆனால் சிஐஏவில் உள்ள சிலர் இவர்களின் மிதமிஞ்சிய ஆற்றலைக் கண்டு பயப்படுகின்றனர். எனவே இவர்களை வலையில் சிக்க வைக்கின்றனர். அதுதான் ட்ரோன்களோடு சண்டையிடுவது., உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகில் உள்ள தொழிற்சாலையில் ஆயுதங்களை மீட்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களை ட்ரோன்கள் கொல்ல முயற்சிக்கின்றன. இவற்றை ரெக்கர் குழு எப்படி அழித்தனர், உயிரோடு மீண்டனர் என்பதைக் சொல்லுகிறது படம். ஆக்சன் படம் என்றால் துப்பாக்கிகள் எண்ணற்ற முறை வெடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் எடுத்த படம். எனவே புத்திசாலித்தனமான விஷயங்களை இயக்குநர் யோசிக்கவே இல்லை. எப்படி ட்ரோன்களை வீழ்த்துகிறார்கள் என்பது...

தற்காப்புக்கலையை கற்கும் தறுதலை நாயகனின் கதை! - அரஹான்

படம்
அரஹான் 2004 இயக்கம்  ரியூ சியுங் வான் ட்ராஃபிக் போலீஸாக நேர்மையாக பணி செய்து வருபவர், சாங் வான்.ஒருநாள் திருடன் ஒருவரின் பர்சைத் திருடிக்கொண்டு பைக்கில் பறக்கிறான். அதை தடுக்கும் முயற்சியில் பெண்ணிடம் கடுமையாக அடிபடுகிறார். அவரை அப்பெண் தன் தந்தை உள்ளிட்ட ஐந்து குருமார்களிடம் கொண்டு சென்று குணமாக்குகிறாள். அப்போது அவர்களுக்கு சாங் வான் உடல் தற்காப்புக் கலைக்கான ஏற்றது என தெரிய வருகிறது. எனவே அவர்கள் தாவோ தற்காப்புக்கலையை விலையின்றி கற்றுக்கொடுக்க முன்வருகிறார்கள். சாங் வான், பெண்களை வெறியோடு கவனித்துக்கொண்டு அலைபவன். அவனால் மனதைக் கட்டுப்படுத்தி தாவோ கலையைக் கற்க முடிந்ததா? ஐந்து குருமார்களையும் கொல்ல துரத்தும் வில்லனை வெல்ல முடிந்ததா? தொன்மையான தாவோ முத்திரையை பாதுகாக்க முடிந்ததா என்பதுதான் கதை. படத்தின் கதை பற்றி இயக்குநர் ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை. கதை அதுபாட்டுக்கு கிடக்கட்டும் என காமெடியில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். இதனால் தற்காப்புக் கலை பற்றிய  விஷயம் டேக் இட் ஈஸியாக கையாளப்பட்டிருக்கிறது. நாயகன் ஏறத்தாழ பார்க்கும் பெண்களை உள்ளாடை வரை நோட்டமிட...

கிறித்துவத்தில் ஒளிந்திருக்கும் தொன்மை மர்மம்! - டாவின்சி கோட்

படம்
டாவின்சி  கோட் டான் ப்ரௌன் எதிர் வெளியீடு பிரான்சிலுள்ள  அருங்காட்சியகத் தலைவர், மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவர் சுட்டு கொல்லப்படுவதற்கு முன்பு அவரின் மூன்று நண்பர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுவிடுகின்றனர். இந்த கொலை கற்சாவி ஒன்றுக்காக நடைபெறுகிறது. இந்த கொலைகளை டீச்சர் என்பவர் வழிநடத்த அரிங்கரோசா என்ற பிஷப்பின் சீடன் சிலாஸ் எனும் அடிப்படைவாதி கொலைகளை செய்கிறான். ஏன் இந்த கொலைகள், கற்சாவி என்பது என்ன?  என்பதை விவரிக்கிறது டாவின் கோட். நாவல் முழுக்க ஏராளமான கணிதப்புதிர்கள் உள்ளன. கணிதத்தில் 35 மார்க்குகளை எடுத்த ஆட்கள் இந்த நூலை தவிர்ப்பது நல்லது. காரணம், ஏராளமான விஷயங்கள் கணிதம் மூலமாகவே பூடகமாகவே கூறப்படுகின்றன. பிபனாச்சி தொடர்வரிசை, டாவின்சியின் குறியீட்டு முறை, என்கிரிப்ஷன், டீகிரிப்ஷன் என பல்வேறு புதிர்முறைகளை சிறப்பாக அமைத்து அதனை விடுவித்திருக்கிறார் நூல் ஆசிரியர் டான் ப்ரௌன். நூலில் புதிராக அமையும் கதாபாத்திரம் அதனை சிறப்பாக வடிவமைத்து இறுதியில் அதனை உடைத்து பிரமிப்பு தருகிறார் ஆசிரியர். முழு நாவலையும் வடிவமைப்பது டீச்சர் எனும் போனில் மட்டும்...

கொலையைக் கண்டுபிடிக்கும் தில் போலீஸ் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  2019 - தெலுங்கு இயக்கம் ஒளிப்பதிவு இசை கொல்லாப்பூர் என்ற ஊரில் நடைபெறும் கொலை வழக்குதான் கதை. அங்கு நரசப்பா என்பவரும் அவரது தம்பியும்தான் கோலோச்சுகிறார்கள். ஊரில் அவர்களை மீறி யாரும தொழில் செய்ய முடியாது. இந்த நேரத்தில் நரசப்பாவின் தம்பி ஊரிலுள்ள கோவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார். கூடவே அவரின் நண்பர்களும் இதில் பலியாகிறார்கள். யார் இந்த கொலையை செய்தது என்பதுதான் கதை.   886 × 1024 கருடவேகாவுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகரின் படம். நாயகனுக்கான பில்டப்புகள் இருந்தாலும் அதைவிட அசத்துவது கதைதான். இதில் அம்சமாக பொருந்துகிறார் டாக்டர் ராஜசேகர். முதலில் என்ன இவர் சும்மா ஊர் சுற்றுகிறார், கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால் அதற்குப்பிறகுதான் ஏராளமான ட்விஸ்டுகள் உள்ளன. ஆஹா படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளன. அசோக்பாபு என்ற கதாபாத்திரம் வில்லனாக மாறுவது சூப்பர் ட்விஸ்ட். அதிலும் இறுதி பதினைந்து நிமிடம் அனைத்து முடிச்சுகளையும் சரசரவென அவிழ்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதி...

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த...

வாழ நினைக்கும் ஆன்மாவின் துயரமான ஆசை - இச்சா - ஷோபா சக்தி

படம்
இச்சா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இந்த நூல் பிரான்சில் உள்ள எழுத்தாளர் ஷோபா சக்திக்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் கையெழுத்துப் பிரதிகளை அளிப்பது போல தொடங்குகிறது. தற்புனைவு வகையில் எழுதப்பட்டுள்ள நூலை கண்ணீர் பெருகாமல் தொடர்ச்சியாக வாசிப்பது கடினமாக உள்ளது. ஆலா என்ற தமிழ்பெண்ணின் வாழ்க்கைதான் இலங்கை அரசியல், வரலாறு, புலிகளின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுடன் சொல்லப்படுகிறது. நூலின் செழுமை இதில் புழங்கும் ஏராளமான பழமொழிகள், புதிய சொற்களில் தெரிகிறது. தமிழீழ ஆதரவாளர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பிடித்தமானதாக இருக்காது. ஷோபாசக்தி/vikatan சாதாரணமாக படிப்பவர்களுக்கு அந்த நிலத்தில் நிம்மதியாக வாழ நினைப்பவர்களுக்கு விடுதலை இயக்கம் எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது. தினசரி வாழ்க்கைப்பாடுகளுக்கு தடுமாறி வரும் தமிழ் மக்களிடம் புலிகள் வலுவில் வந்து உதவி கேட்க பிரச்னைகள் தொடங்குகின்றன. இப்படித்தான் ஆலா என்ற பெண்ணின் வாழ்கையும் இஞ்சி தேநீரை புலிகளுக்கு வழங்கிய பொழுதில் மாறுகிறது. அடுத்த நாள் அவளது தம்பியை வெட்டிக்கொல்கிறது சிங்கள ஊர்க்காவல் படை. இதில் ஏற்...

இறைச்சி பற்றாக்குறை ஏற்படுமா?

படம்
pixabay இன்று பெரும்பாலான இறைச்சி உணவுகள் நமக்கு பண்ணை விலங்குகளின் மூலமாக கிடைக்கிறது. காய்கறிகள், பருப்புகள், பால் பொருட்கள் மூலம் குறிப்பிட்ட சத்துகள் கிடைத்தாலும் உடலில் அவசிய வளர்ச்சிக்கு தேவையான புரதம் இறைச்சி மூலமே கிடைக்கிறது. இது அறிவியல் உண்மை. சிலர் தீவிரமான அரசியல் கருத்தாக கருத்தியலாக உணவைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த கருத்து கொண்டவர்கள்தான் நடப்பிலும் எதிர்காலத்திலும் இந்தியாவில் மதிய உணவுத்திட்டத்தை வழிநடத்துபவர்களாக உள்ளனர். இப்போதே உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்த்த உணவுகளை தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர். இப்போது பண்ணை விலங்குகள் தரும் இறைச்சி உணவு பற்றிய தகவல்களை பார்ப்போம். பொதுவாக கட்டி வைத்து வளர்க்கப்படும் பசு, பன்றி பெரியளவு ஊட்டச்சத்து கொண்டவையாக இருப்பதில்லை. அவை அதன் போக்கில் திரிந்து புற்களையும், பருப்புகளையும், புழுக்களையும் சாப்பிட்டு வளரும்போதுதான் அதன் இறைச்சி நுண்ணூட்டச்சத்துகள் கொண்டதாக மாறுகிறது. சாதாரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிக்கு புற்கள், இலைகள் ஆகியவையே உணவு. இதனால் இதன் இறைச்சியில் ஒமேகா 3 சத்துகள் காணப்படுகின்றன....

பசியில் தவிக்கும் உலகம்!

படம்
pixabay நாம் கடந்த அறுபது ஆண்டுகளாக பசியோடு போராடி வருகிறோம். இந்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கினாலும், அவற்றை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சர்வதேச முதலாளிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாற்றி வருகிறது. அதன் தரத்தை குறைத்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை பாதுகாக்கும் வசதியின்றி வீணாக்கி வரும் செய்திகளையும் படித்திருப்பீர்கள். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் இன்னும் கூட ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளை பலிகொடுத்து வரும் செய்திகளை வாரத்திற்கு ஏதேனும் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1960களில் மக்களுக்கு சரியானபடி உணவுப்பொருட்களை வழங்கமுடியாத பிரச்னை எழுந்தது. இதனை பால் எல்ரிச்என்ற எழுத்தாளர் 1968ஆம் ஆண்டு எழுதிய தனது தி பாப்புலேசன் பாம் என்ற நூலில் விவரித்துள்ளளார். இந்த நிலையை சமாளிக்கவே, பசுமை புரட்சி உருவானது. இது வேறு ஒன்றும் இல்லை. மாடுகளால் உழுத நிலத்தை ட்ராக்டர் கொண்டு உழுவது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் வேதி உரங்களைப் பயன்படுத்துவத...

கோவிட் -19 இறப்பைக் கணக்கிடுவதில் ஏன் சிக்கல்?

படம்
pixabay கோவிட் 19 நோயும், இறப்பும்! இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பும் இறப்பும் மக்களை பயமுறுத்தி வருகிறது. நூறுபேரை கொரோனா தாக்கினால் அதில் மூன்று பேருக்கு இறப்பு நிச்சயம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..  இப்போது சோதனையில் குறைவான ஆட்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பரவலான அளவில் சோதனைகள் நடந்தால் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளை கண்டறிய முடியும். உலகளவில் பதினான்கு நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். இருப்பதிலே குறைவான பலிகளைக் கொண்ட நாடு ஜெர்மனிதான். அந்நாட்டில் நூறு பேர்களுக்கு 0.69 பேர் மட்டுமே இறப்பை சந்திக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இத்தாலி நாடு நூறு பேர்களுக்கு 10.69 என்ற எண்ணிக்கையில் இறப்பைச் சந்தித்து வருகிறது. தென்கொரியா இந்த விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து வைரஸ் பரவினாலும் அதனை கட்டுப்படுத்துவதில் அந்நாடே முன்னிலையில் உள்ளது. ஏறத்தாழ பாதிக்கப்பட்டவர்களை பெரும்பாலும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் இதில் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை அதிகளவு இறப்பைச் சந்...

எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்

படம்
pixabay எப்படி சாப்பிடுவது? காலை எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில் அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும். இரவுப்பணிகளுக்கு செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா? நாம் ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில் பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும். வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள். இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை ஆகும்.  ...