மாசுபாட்டிற்கு உண்மையான காரணம்?
மாசுபாட்டிற்கு காரணம்!
தீபாவளி, புத்தாண்டு ஆகிய தினங்களில்
பட்டாசு வெளிப்பதற்கு கட்டுப்பாடுகளை நீதிமன்றங்கள் விதிக்கத் தொடங்கியுள்ளன. பட்டாசுதான்
மாசுபாட்டிற்கு முதல் காரணமா?
இந்திய தலைநகரமான டெல்லியில் காற்று
மாசுபாட்டிற்கு விவசாயிகள் வயல்களை எரிப்பது காரணம் என பலரும் கூறினர். மின்நிலையங்களிலிருந்து
வெளியாகும் எரிசாம்பல், நிலக்கரி மாசுக்களை பற்றி யாருமே பேசவில்லை. ராஜ்காட் மற்றும்
படர்பூர் நகரங்களிலுள்ள மின்நிலையங்களிலிருந்து வெளியாகும் எரிசாம்பல் காற்றை
26-37% மாசுபடுத்துகிறது என உறுதிபடுத்தியுள்ளது கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்களின்
ஆய்வு.
உ.பியின் குர்ஜா மின்நிலையத்தில்
பயன்படும் நிலக்கரியிலிருந்து வெளியாகும் எரிசாம்பல் காற்றை மாசுபடுத்தும் என அமெரிக்காவின்
ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வுக்கழகம்
இந்திய அரசை எச்சரித்துள்ளது. மின்நிலையங்களை இயக்க பயன்படும் நிலக்கரியிலுள்ள எரிசாம்பலின்
அளவு 45%. இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தினால் எரிசாம்பலின் அளவு 15% குறையும். சிமெண்ட்
ஆலைகள் மற்றும் சாலைப்பணிகளிலும் எரிசாம்பல் பயன்படுகிறது. இதில் உலோகம் கலந்திருப்பதால்
நிலம்,நீர், காற்று என பரவும் அனைத்தையும் மாசுபடுத்துகிறது.