ஜப்பானின் மேஜர் வயது சட்டம்! -எதற்கு?

Image result for japan



ஜப்பானின் இளமை ரகசியம்!

ஜப்பானில் வயதுவந்தோர் அதிக இளமையுடன் தோன்றக்காரணம் அரசின் சட்டம்தான். 2022 ஆம் ஆண்டில் 18(20 வயதிலிருந்து குறைத்து) வயது என அதிகாரப்பூர்வ சட்டத்தை திருத்தியுள்ளது. 1876 ஆம் ஆண்டுக்குப்பிறகு மக்களின் வயதுவந்தோர் சட்டத்தை அரசு முதல்முறையாக மாற்றியுள்ளது. இனி பதினெட்டு வயதைத் தொட்டால் பெற்றோரின் தலையீட்டை தவிர்த்து சுயமாக திருமணம் செய்ய அரசு வாய்ப்பளிக்கிறது.
தற்போதுள்ள சட்டப்படி ஆண்கள் பதினெட்டும் பெண்கள் பதினாறு வயதை கடந்தால் திருமணம் செய்ய வழியுண்டு. இதில் பெண்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம். சுயமாக திருமணத்தை தேர்ந்தெடுக்க வயது இருபதை எட்ட வேண்டும். வயது சட்டத்தை திருத்தினால் இருபதிற்கும் மேற்பட்ட சட்டங்களை திருத்தவேண்டியிருக்கும். இதில் குடியுரிமை, படிப்பு உள்ளிட்டவை சேரும். ஜப்பானில் பதினெட்டை எட்டாதவர்கள் குடிக்க, புகைக்க, சூதாட, குழந்தைகளை தத்தெடுக்கவும் தடையுள்ளது. குழந்தைபிறப்பு குறைந்த ஜப்பானை உயிர்ப்பிக்கவே இம்முடிவு என்கின்றது அரசில் வட்டாரங்கள். 015 ஆம் ஆண்டு ஜப்பான் அரசு வாக்களிக்கும் வயதை இருபதிலிருந்து பதினெட்டாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.