தங்கையைக் காக்க அம்புகளால் அண்ணன் நடத்தும் போர்!



Movie Review: "War of the Arrows" | K-Drama Amino

வார் ஆஃப் ஏரோஸ்  - 2011 - கொரியா

இயக்குநர் - கிம் ஹான் மின்

இசை - டா சியோங் கிம்


1636ஆம்ஆண்டு நடைபெறும் கதை. கொரிய கிராமத்திற்குள் புகுந்து அரசரின் படை ஒன்று, அங்குள்ளவர்களை அடிமையாக பிடித்துப்போய்விடுகிறது. அதில் வில் வீரரின் தங்கையும் இருக்கிறாள். வில் வீரரின் தந்தைக்கு தங்கையை தான் உயிருள்ளவரை பாதுகாப்பதாக செய்துகொடுத்த சத்தியம் நினைவுக்கு வர, அண்ணன் தங்கையைப் பாதுகாக்க செல்கிறார். எதிரிகளை எப்படி கொன்று தங்கையை மீட்கிறார் என்பதுதான் கதை.

எதிரிப்படைகளில் தளபதியின் கீழுள்ள படை, பல்வேறு வேறுபட்ட அம்புகளை பயன்படுத்துகிறது. ஆனால் அது நாயகனின் அம்புகளின் திறனுக்கு அருகில் கூட வரமுடியாது. காரணம், குட்டையான அம்புகளின் அமைப்பு. அதனை கண்டுபிடித்த தளபதி சுதாரிப்பதற்குள் அடிமையாக பிடித்துசென்றவர்கள் தங்கையின் கணவன் விடுவித்துவிடுகிறான். தங்களை அடிமையாக்கியதோடு இளவரசரின் படுக்கைக்கும் தனது தங்கையை கொண்டு சென்ற இளவரசரை அண்ணன் கொடூரமாக எரித்துக்கொன்று பழிவாங்குகிறான். இதுவரை அவனை கொல்ல வேண்டும் என்று என்று மட்டும் நினைத்த தளபதி, அவனது ஈகோ கடுமையாக காயப்படுத்தப்பட்டதை உணர்ந்து கொந்தளிக்கிறான். அண்ணன், தங்கை, தங்கையின் கணவன் ஆகிய மூவரையும் கொல்ல முயல்கிறான். இந்த கொலை முயற்சியிலிருந்து மூவரும் தப்பினார்களா என்பதை அம்பிலிருந்து ரத்தம் துளித்துளியாக சொட்டுவது போல சாகசமாக சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் நாயகனை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குடித்துவிட்டு சும்மா சுற்றிக்கொண்டு இருப்பதாக காட்டி பிறகு அவரின் பாத்திரம் மீது ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்றுகிறார்கள். தன் விருப்பத்திற்கு மாறாக தங்கை தானே திருமணத்தை தீர்மானிக்கும் காட்சியில் அம்புகளை எய்துவார். ஆனால் அது முன்னேயுள்ள இலக்கில் தைக்காது. தங்கை வந்து தில்லாக அம்பை எய்து இலக்கை அடைவார். ஆனால் பிறகுதான் தெரியும், நாயகன் அம்பை சுழற்றி எய்து பின்னாலுள்ள இலக்கை  அடித்திருக்கிறார் என்பது.

இறுதிக்காட்சியும் ஏறத்தாழ தன் லட்சியத்தை அடைந்துவிட்டதை உறுதி செய்கிறது. உணர்ச்சிகரமான காட்சிகள், சண்டைக்காட்சிகள் என அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள்.

படத்தில் எந்த காட்சிகளும் சோர்வூட்டாமல் சுறுசுறுப்பாக நகர்கின்றன.  அம்புகளுக்கு இடையிலான சண்டை  செம சுவாரசியமாக நேரம்தான்.

கோமாளிமேடை டீம்


 

பிரபலமான இடுகைகள்