வறுமைதான் எனக்கு உலகைக் கற்றுக்கொடுத்தது



Roberto Benigni ❣
pinterest





மொழிபெயர்ப்பு நேர்காணல் 

ராபர்ட் பெனிக்னி, இத்தாலி நடிகர்

பினாச்சியோ கதை உங்களுக்கு முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் லேசு பாசாக அறிந்திருப்பீர்கள். மரத்தில் செய்யப்பட்ட சிறுவன் நிறைய பொய்களைச் சொல்லிக்கொண்டே இருப்பான். பொய்களின் நீளத்திற்கு ஏற்ப மூக்கும் வளர்ந்து கொண்டே இருக்கும். 1970களில் உலகம் முழுக்க வலம் வந்த குழந்தைகளின் கதை இது. இந்த கதை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கதையில் வரும் பினாச்சியோ திரும்ப திரைப்படமாக்கப்பட்டு எழுபதாவது பெர்லின் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. இதில், பினாச்சியோவின் அப்பா கெபிட்டோவாக, இத்தாலி நடிகர் ராபர்ட் பெனிக்னி நடித்துள்ளார். இவர் நடித்த லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படம் ஆஸ்கார் கௌரவம் பெற்றது. எழுத்தாளர், இயக்குநர் நடிகர் என பன்முகம் கொண்ட -அவரிடம் பேசினோம். 

நீங்கள் இளமையில் கடுமையான வறுமையைச் சந்தித்தவர் என்று கேள்விப்பட்டோம். 

ஆமாம். எனது தந்தை உண்மையில் தச்சுவேலை செய்பவர்தான். அவர் என்னை நான் சொல்லும் ஏராளமான பொய்களை வைத்து என்னை செல்லமாக பினாச்சியோ என்று அழைத்தார். நான் டஸ்கானியோ என்ற நகரில் பிறந்தேன். இதுகூட பினாச்சியோ என்ற கதாபாத்திரம் பிறந்த ஊர்தான். என்னை ஃபெலினி பினாச்சியோ என்று ஒருமுறை அழைத்தார். அப்போதிலிருந்து நான் பினாச்சியோவாகவே வாழ்ந்து வருகிறேன்.

இன்றைய காலத்தில் பினாச்சியோவை திரைப்படமாக எடுப்பது எப்படி பொருந்தும்?

வாழ்க்கை என்பது என்றுமே புரிந்துகொள்ள முடியாத து. அதனை சுவாரசியமாக பினாச்சியோ போன்ற படங்கள் அவசியம். இதில் ஐந்து வயது குழந்தைகள் முதல் அறுபத்தைந்து வயது பெரியவர்கள் வரை கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான கதைகள் என்பது மட்டுமல்ல, கவனித்துப் பார்த்தால் இதிலுள்ள மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நம் அனைவருக்குமே தேவை என்று புரியும். 

பினாச்சியோ கதை குழந்தைகளுக்கு சற்று கடுமையான கதையாகவும், பெரியவர்களுக்கு எளிமையான கதையாகவும் இருக்குமே?

எனக்கு கிடைத்த கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஓத்தெல்லா, லாகோ போன்ற கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் கொண்டது. ஹாம்லெட் மற்றும் ஓபெலியா போன காவியங்களிலுள்ள இருண்மைத் தன்மை மற்றும் நம்பிக்கையை கொண்டது.
 பிரான்சிஸ் போர்டு கப்போலோ இந்த படத்தை எடுக்க விரும்பினாரா?
நான் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தில் நடித்திருந்த சமயத்தில் என்னை அவர் சந்தித்தார். என்னை கெப்பட்டோ வேடத்தில் நடிக்க முடியுமா? என்று கேட்டார். நான் பினாச்சியோவிலுள்ள வேல் என்ற சிறிய பாத்திரத்தில் கூட நடிக்கத் தயார் என்று உற்சாகத்துடன் கூறினேன்.
மீண்டும் இயக்குநராக விருப்பமா?2012ஆம் ஆண்டு வுடி ஆலனின் ரோம் வித் லவ் படத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு நிறைய டிவி தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இப்போது திரும்பவும் இயக்குநராக என்னை பார்க்க எனக்கே ஆசையாக உள்ளது.

உங்களது இளம் வயது வறுமை பற்றி சொன்னீர்கள். அதனை எப்படி உணர்கிறீர்கள்?

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றபோது இதுபற்றி பேசினேன். அது பொய்யானதல்ல. எனக்கு வறுமையை என் பெற்றோர்தான் பழக்கினார். அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் உலக அனுபவங்களை அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தனர். இரு சகோதரிகள் பிறகு நான், எனது பெற்றோர் உறங்க எங்கள் வீட்டில் ஒரே படுக்கைதான் இருந்தது. அதனைத்தான் நாங்கள் பயன்படுத்தினோம். வறுமையில் இருந்தாலும் உலகை மகிழ்ச்சியுடன் பார்ப்பதற்கு என் பெற்றோர் கற்றுக்கொடுத்தனர். 

நீங்கள் இப்போது வறுமையில் இல்லை. வசதியாகத்தானே இருக்கிறீர்கள்.

உண்மையில் நான் இன்று சம்பாதித்த பணத்தில் மாளிகை போன்ற வீட்டைக் கட்டியுள்ளேன். ஆனால் பணத்தை மட்டும் வைத்து என்ன செய்யமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம், ஒரேநேரத்தில் இரு காபிகளை ஆர்டர் செய்யலாம் எனகிறீர்களா? எனது வீடு அழகானது. அதோடு என் வாழ்க்கை எளிமையானது. 

உங்களது வாழ்க்கையை சுயசரிதைப் படமாக எடுக்க விரும்புகிறீர்களா?

இல்லை. எனது வாழ்க்கையை விட இங்குள்ள பலரின் வாழ்க்கை இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 29, 2020 சுப்ரா குப்தா