வாடகைக்கு செக்ஸ்!- கொதிக்கும் மத அமைப்புகள்




Related image

பிட்ஸ்!

கண்ணை நம்பாதே!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மூளையை மிரட்டும் மாயபிம்ப அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. நம் கண்களையே நம்ப முடியாத அளவு ஹோலோகிராம், புதிர்கள், சமூக விழிப்புணர்வு என பல்வேறு தீம்களில் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்டிகல் இல்யூசனை எப்படி உருவாக்கினோம் என விளக்கி கூறுவது இந்த மியூசியத்தின் ஸ்பெஷல்.

பொம்மை பெண்!

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள கிங்கிஸ்டால்ஸ் நிறுவனம், அண்மையில் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடத்தொடங்கியவுடன் பிரச்னை தொடங்கிவிட்டது. ரோபோ விபச்சாரம் நம் நகரத்திற்கு ஆகாது; கற்பழிப்புகளை ஊக்குவிக்கும் என கொதித்தெழுந்த உள்ளூர் கலாசார அமைப்புகள் நகர மேயரிடம் உடனே மனுகொடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன. கம்பெனி எந்த ரூல்ஸையும் மீறலையே என நகரமேயர் குழம்பி வருகிறார்.

சிலந்தி ராஜாங்கம்!

கிரீசிலுள்ள அய்டோலிகா கடற்கரை பகுதியில் 300 மீட்டருக்கு Tetragnatha genus  இன சிலந்திகள், மரம், செடி என அனைத்தையும் மூடி தம் வலையைக் கட்டி இடத்தை ஆக்கிரமித்திருப்பதுதான் இணைய வைரல் ஸ்டோரி.  கியானிஸ் கியானாபௌலோஸ் என்பவரின் வீடியோ மூலம் சிலந்திகள் உலகெங்கும் பிரபலமாகி விட்டன. “இவ்வளவு பெரிய சிலந்தி வலையை நான் எங்குமே பார்த்ததில்லை” என வியந்துள்ளார் கியானிஸ்.

குப்பை போடாதீர்கள்!

சீனாவின் பெய்ஜிங்கில் சிக்னலில் நின்ற காரிலிருந்த பெண் ஒருவர், வழக்கம் போல நம்ம ஊருதானே என குப்பையை சகஜமாக சாலையில் எறிந்தார். உடனே அதைப்பார்த்த பைக்கில் வந்த பெண் செய்ததுதான் ஆசம். கீழே விழுந்த குப்பைக்கவரை எடுத்து திருப்பி காரில் எறிந்து விட்டு டாப் கியர் போட்டு மின்னலென பைக்கில் பறந்துவிட்டார். டெஸ்ட் எழுதினப்புறம் பாடம் படிச்சிருக்காங்க கார் சீமாட்டி!