ஐரோப்பாவை எதிர்க்குமா போலந்து?





Image result for poland


போலந்தின் எழுச்சி!

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஐரோப்பாவிலுள்ள செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் இணைந்தன. பொருளாதாரத்திற்காக தனது வாசல்களை திறந்து வைத்துள்ள மூன்றுநாடுகளின் வார்சா, புதாபெஸ்ட், பிராக் ஆகிய நாடுகள் சுற்றுலாவிற்கு பிரபலமானவை. ஆனாலும் முன்னேற்றத்தில் பின்சீட்டில்தான் இந்நாடுகள்  உள்ளன.
மூன்று நாடுளிலும் பெரிய பொருளாதாரம் கொண்ட போலந்து TSI திட்டம் மூலம் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், எரிவாயு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவை நிறைவேறினால் போலந்து ஐரோப்பாவிற்று எதிரான வலிமையான நாடாகிவிடும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ரஷ்யா இழந்த அதிகாரத்தை இப்பிரதேசத்தில் மீட்கும் ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
டிஎஸ்ஐ திட்டத்தின் மூலம் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் வலுப்பெறவிருக்கின்றன. கம்யூனிச வழியில் நடைபோட்ட பதினொரு நாடுகளுடன் பனிரெண்டாவது நாடாக ஆஸ்திரியா இணைந்து அடிப்படை கட்டமைப்புகளை டிஎஸ்ஐ திட்டத்தின் மூலம் செயல்படுத்தவிருக்கின்றன. பால்டிக், அட்ரியாடிக், கருங்கடல் ஆகிய கடல் பகுதிகளை இணைத்தும், கர்பாடியா, கிளைபேடா, லிதுவேனியா, திசாலோனிகி, கிரீஸ் ஆகிய நாடுகளை சாலைகள் இணைக்கும் திட்டம் முக்கியமானது. இதோடு குரோஷியாவுடன் இணைக்கும் எரிவாயு திட்டமும் ரஷ்யாவின் எரிவாயுவை நம்பியுள்ள நிலையை மாற்றும்.


பிரபலமான இடுகைகள்