காதலால் ஜோலி போயிந்தி! - விமானத்தில் லவ் ஸ்டோரி









பிட்ஸ்!
Related image






காவல் யுத்தம்!

அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் கிரிஸ்டோபர் மில்லர், நாய் தீவிரமாக உறுமி குரைக்கும் சத்தம் கேட்டு பதறி எழுந்தார். வீட்டின் வெளியே பனிக்கரடியோடு அவரது நாய் தீவிரமாக மல்யுத்தம் செய்துகொண்டிருந்தது. உடனே நாயைக் காப்பாற்ற மில்லர் துப்பாக்கியை எடுத்து சுட பனிக்கரடி மிரண்டோடிவிட்டது. நாய் பனிக்கரடியோடு தீரமாக போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாய் மேயருக்கு அஞ்சலி!

அமெரிக்காவின் ஓஹியோ நகரைச் சேர்ந்த மேயரான நாய் அண்மையில் லூசி லூ காலமானதால் அதற்கு அந்நகர மக்கள் நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ராபிட் ஹேஸ் பகுதிக்கு 2008-2016 காலகட்டத்தில் மேயராக லூசி லூ பதவிவகித்தது. 12 வயதில் இறந்த மூன்றாவது பெண் மேயர் நாய் லூசி லூ. நகரின் பல்வேறு அறக்கட்டளை நிகழ்வுகளில் கலந்துகொள்வதே லூசி லூவின் முக்கியப்பணி.

விண்வெளியில் பார்ட்டி!

விண்வெளியில் பணிபுரியும் வீரர்களுக்காக ஜீரோ கிராவிட்டி முறையில் ஹைடெக் பாட்டிலில் சாம்பைனை பிரெஞ்சு நிறுவனம் தயாரித்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் கார்டன் ஸ்டெல்லர் தயாரித்துள்ள சாம்பைன் ஊடகங்களின் முன்னிலையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இனி பால்வெளியிலும் பார்ட்டிதான்!

காதலால் வேலை போச்சு!

சீனாவின் விமானநிறுவனத்தைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு விமானத்தினுள்ளே தடாலடியாக அவரின் காதலர் தன் காதலை கூறியதால் வேலை பறிபோயுள்ளது. கடந்த மேமாதம் வைரலாக பரவிய வீடியோவில் பணிப்பெண்ணுக்கு காதலர் பவ்யமாய் காதல் சொல்லும் வீடியோ செம ஹிட். தற்போது பணிநேரத்தில் பயணிகளை கவனிக்காத குற்றத்திற்காக விமான பணிப்பெண்ணுக்கு டிஸ்மிஸ் ஆர்டரை விமானநிறுவனம் வழங்கியுள்ளது. சரிதான் இல்லை அநீதி என சீனர்கள் இணையத்தில் இதுதொடர்பாக வாதிட்டு வருகின்றனர். லவ் சேட்டையால் வேலை போச்சே!