ரா அமைப்பு இதுவரை செய்தது என்ன?



Related image



இந்தியாவின் ரகசிய திட்டங்கள்!


Operation Chanakya
காஷ்மீரில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு ஆதரவான இக்வான் உல் முஸ்லீமின், முஸ்லீம் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவான அமைப்புகளை ரா(RAW) உருவாக்கும் திட்டமிது.

Baloch Game
காஷ்மீரில் குடைச்சல் கொடுக்கும் பாக்கின்   ஐஎஸ்ஐ ரூட்டை அப்படி காப்பியடித்த பலுசிஸ்தானில் செயல்படுத்தியது ரா அமைப்பு. 1980 ஆம் ஆண்டிலிருந்து டீம் எக்ஸ் என்ற பெயரில் ஆயுதங்களையும், கரன்சிகளையும் அள்ளிக்கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட போராளிகளை மடைமாற்றுகிறது.

Operation Leech
மியான்மரிலிருந்த காச்சின் விடுதலை ராணுவத்திற்கு(KIA) ரா அமைப்பு பயிற்சி அளித்தது. பின்னாளில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிகெடவும் இச்செயல் ஆதாரமானது. இவ்வமைப்பின் ஆறு முக்கிய தலைவர்களை கொன்று 34 கொரில்லாக்களை கைது செய்து அமைப்பை முடக்கியது ரா.

Bangala Partition

பாகிஸ்தானுக்கு ஆதரவான லயோனல் ஜெனரல் எர்ஷாத்துக்கு எதிராக ஷேக் ஹசீனா, கலீல்தா ஸியா ஆகியோரை இணைத்து ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் விளையாட்டை ரா அமைப்பு விளையாடியது.

அரசியல்ரீதியிலான பல சதுராட்டங்களில் ஐஎஸ்ஐக்கு முன்பிருந்தே 'ரா'வின் கை ஓங்கியே இருந்தது. ஆனால் 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனதா கட்சி, ரா அமைப்புக்கான நிதியை பெருமளவு வெட்டவே ராவின் பல்வேறு திட்டங்கள் முடங்கி, ரா மெல்ல அமைப்பு ரீதியாக நொறுங்க தொடங்கியது. இன்று இந்தியப்படங்களிலேயே கூட ரா அமைப்பை பற்றி சொல்லி பெருமைப்பட முடியாததன் காரணம் இதுவே.